Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஅரபு நாடுகளில் வெளியாகிறது.. இந்த படத்தில் சர்ச்சை இல்லை.. பர்ஹானா படக்குழு கோரிக்கை

அரபு நாடுகளில் வெளியாகிறது.. இந்த படத்தில் சர்ச்சை இல்லை.. பர்ஹானா படக்குழு கோரிக்கை

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரமாக நடித்திருக்கும் திரைப்படம் பர்கானா. இந்த திரைப்படம் மே 12ஆம் தேதி நாளை திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் ஒரு இஸ்லாமிய பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதால் சற்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனெனில் தற்பொழுது புர்கா மற்றும்  கேரளா ஸ்டோரி என்று திரைப்படங்கள் எல்லாம் இதுபோன்ற இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்து அவதூறாக எடுக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்த வரிசையில் வர இருக்கும் பர்கானா திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இது பற்றி இந்த திரைப்படத்தின் உடைய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தற்பொழுது விளக்கம் கொடுத்துள்ளது. கைதி, அருவி போன்ற திரைப்படங்கள் எல்லாம் இந்நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிறுவனம் தற்பொழுது நாங்கள் மத நல்லிணக்கத்தை மாறு செய்யும் விதமாக எந்த திரைப்படத்தையும் தயார் செய்வது இல்லை. நாங்கள் கலாச்சாரம் மத நல்லிணக்கம் ,அன்பு போன்ற எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்கி வருகிறோம்.

ஒரு திரைப்படம் உருவாகுவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதை உருவாக்குவதற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் உழைக்கிறார்கள். அதனால் வெறும் ட்ரைலரை பார்த்து திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதை பற்றி சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கு அதை திரையரங்குகளில் வெளியிடுவதற்கும், தணிக்கை சட்டங்கள் இருக்கிறது. அது நம் நாட்டை விட வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பகரைன் போன்ற நாடுகளில் அந்த சட்டங்கள் இன்னும் கடுமையானதாக இருக்கிறது.

அப்படி கடுமையான சட்டங்களை கொண்டிருக்கும் நாடுகளில் கூட இந்த பர்ஹானா என்ற திரைப்படம் நாளை வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. இதனால் இந்த திரைப்படத்தில் சர்ச்சையான கருத்து எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என பட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

எங்களின் நோக்கம் மதவாதத்தை உண்டு செய்வது அல்ல. ஒரு சிறந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது போன்று அவர்களை விளக்கத்தை இத்திரைப்படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.

Most Popular