Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாமுதல் நாள் வசூலை வென்றது ப்ளூ ஸ்டாரா சிங்கப்பூர் சலூனா

முதல் நாள் வசூலை வென்றது ப்ளூ ஸ்டாரா சிங்கப்பூர் சலூனா

தமிழ் சினிமாவில் ஜனவரி 25ஆம் தேதி ஆன நேற்று ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

- Advertisement -

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு, நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இயக்குனர் ஜெயக்குமார் இயக்கிய ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த திரைப்படங்களில் ஒன்றாகும்.

இந்த திரைப்படத்தின் உடைய ட்ரைய்லர் வெளியிடப்பட்ட போது விறுவிறுப்பாக இருந்ததை  பார்த்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டார்கள் ஆனால், நேற்று வெளியிடப்பட்ட முதல் நாள் 60 இலிருந்து 70 லட்சம் வரை தான் வசூலாகி இருக்கிறது. ரசிகர்கள் காட்டிய எதிர்பார்ப்பிற்கு இது குறைவான வசூல் ஆகும்.
மேலும் இந்த திரைப்படம் ஒரு நல்ல கதை ஆனால்  இயக்கத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் எந்தவித எதிர்பார்ப்புமே இன்றி வெளிவந்த ஆர் .ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, அன்பிற்கினியான் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

- Advertisement -

எந்த ஆரவாரமும் இன்று வெளிவந்த இந்த திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வரை வசூல் ஆகி இருக்கிறது. இன்னும் வரக்கூடிய நாட்களில் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு ஆர்ஜே பாலாஜி நடித்த எல் கே ஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களை ஒப்பிடுகையில் இந்த திரைப்படம் இவருக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வசூலை பெற்ற சிங்கப்பூர் சலூன் திரைப்படம் தான் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக முதலிடத்தில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Most Popular