செய்திகள்

ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மற்றுமொரு படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யா

சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி காட்சியில் திடீரென உள்ளே வந்து, விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோருக்கெல்லாம் பாஸ் நான் தான் என்று என்று ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா கர்ஜித்து சென்றார். அவர் நடித்த அந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

3 நிமிடம் மட்டுமே வந்தாலும் திரைப்படம் பார்த்த அனைவரையும் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் அவரை நினைக்க வைக்குமளவுக்கு நடித்தி விட்டுச் சென்றார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் அவருக்கு ரோலக்ஸ் வாட்ச் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது கூட குறிப்பிடத்தக்கது.

Advertisement

மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா

2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று. சூர்யா போன்ற ஒரு நடிகரிடம் இருந்து எந்த மாதிரியான திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அதை விட இரண்டு மடங்கு இருந்தது அந்த படம்.

Advertisement

கேப்டன் ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்புள்ளியாக எடுத்துக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சூரரை போற்று. கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் எப்படி ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நெருங்குகிறான் என்பதுதான் கதை. அன்றாட மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிக்க வேண்டும், குறைந்த விலையில் அவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதுதான் அவரின் கனவு. நெடுமாறன் ராஜாங்கம் என்கிற கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவர் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

அமேசான் பிரைமில் வெளியான இந்த திரைப்படம் இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் அனைவர் மத்தியிலும் வரவேற்ப்பை பெற்றது. தற்பொழுது இந்த திரைப்படம் பாலிவுட்டில் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் இதைத் தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் இன்று நடிகர் சூர்யா தன்னுடைய டிவிட்டர் வலைதளத்தில் அக்ஷய்குமார் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.

“அக்ஷய்குமார் சார் உங்களை விர் (திரைப் படத்தில் அக்ஷய்குமார் பெயர்) ஆக பார்க்க ஏக்கமாக இருந்தது. நமது கதை அழகாக மீண்டும் உயிர் பெறுகிறது சுதா கொங்கரா. சூரரை போற்று ஹிந்தி குழுவுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து நடித்தேன்”, என்று குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

தற்பொழுது சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பின்னர் வெற்றிமாறனுடன் இணைந்து அனைவரும் எதிர்பார்க்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோல் விக்ரம் மூன்றாம் பாகத்தின் வில்லன் ரோல். எனவே அந்த திரைப்படமும் தற்பொழுது சூர்யா கையில் உள்ளது. இதுபோக மாதவன் நடிப்பில் வெளிவரவுள்ள நம்பி த ராக்கெட்ரி படத்தின் கேமியோ ரோலில் நடித்துள்ள அவர் தற்பொழுது சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கிலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.இதன் மூலம் சூர்யா தற்போது பயங்கர பிஸியாக கமிட்டாகி, நடித்து வருகிறார் என்று மட்டும் நமக்கு புரிகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top