Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்தில் நடித்தது எப்படி? யாருக்காக ஒப்பு கொண்டேன்.. கெளதம் மேனன் கருத்து

லியோ படத்தில் நடித்தது எப்படி? யாருக்காக ஒப்பு கொண்டேன்.. கெளதம் மேனன் கருத்து

லியோ படத்தில் தான் எப்படி நடித்தேன் என்பது குறித்து இயக்குனர் கௌதம் மேனன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் லியோ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த படத்தை நான் ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான்.

- Advertisement -

ஏற்கனவே நான் விக்ரம் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணத்தால் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. லியோ படம் தொடங்கியதில் இருந்து லோகேஷ் கனகராஜ் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை எனக்கு அப்டேட் கூறிக் கொண்டே இருப்பார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிக்கிறீர்களா என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. சார் கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் இருக்கிறீர்கள். அதற்கு தகுந்தாற்போல் உங்கள் நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். இந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று என்னுடைய துணை இயக்குனர்கள் அனைவரிடமே கேட்டு விட்டேன். அவர்கள் அனைவரும் உங்கள் பெயர்தான் சொல்லி இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த படத்தில் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். மேலும் நான் ஒரு இயக்குனர் நடிப்பு எனக்கு இரண்டாம் பட்சம் தான். இதனால் எனக்கு சௌகரியமான சூழ்நிலை படத்தளத்தில் இருந்தால்தான் நடிக்க முடியும்.  லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய துணை இயக்குனர்கள் அனைவரும் நண்பர்கள் போல் தான் பழகிக்கொள்வார்கள்.

மேலும் திரிஷா எனக்கு நல்ல நண்பர். விஜய்யும் எனக்கு நன்றாக தெரியும். இதன் மூலம் இந்த படத்தின் நடித்தால் நமக்கு அசோகர்யமாக இருக்காது என்பதை உணர்ந்துதான் லியோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜயுடன் சேர்ந்து பல காட்சிகளில் நானும் வருவேன். இந்த படம் ஷூட்டிங் போது விஜயுடன் நேரத்தில் செலவழித்து பேச நிறைய வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார்.

Most Popular