Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஅப்போ துருவ நட்சத்திரம் கதி என்ன.. ஒரு வழியாக ரிலீஸாகும் கெளதம் மேனன் படம்.. அதிரடி...

அப்போ துருவ நட்சத்திரம் கதி என்ன.. ஒரு வழியாக ரிலீஸாகும் கெளதம் மேனன் படம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஐசரி கணேஷ்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், லால், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கப்பூர் சலூன். ஜனவரி 25ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விடுமுறை நாட்களில் நல்ல வசூலை ஈட்டிய நிலையில், தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.

- Advertisement -

இதனையடுத்து சிங்கப்பூர் சலூன் படக்குழு இன்று படத்தின் வெற்றியை கொண்டாடினர். இந்த விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் கோகுல்லு தங்க சங்கிலி ஒன்றை அணிவித்து பாராட்டினார். அதேபோல் மீண்டும் கோகுல் இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் ஐசரி கணேஷ் அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் அடுத்த 6 மாதங்களில் 6 படங்களில் ரிலீஸிற்கு தயாராக இருப்பதாக கூறி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதில் பிப்ரவரி மாதம் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”ஜோஷ்வா” படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக ஐசரி கணேஷின் மருமகனான வருண் நடித்துள்ளார்.

- Advertisement -

இவர் ஏராளமான படங்களில் துணை கதாபாத்திரங்களில் தோன்றியவர். முதல்முறையாக பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். அதேபோல் யோகி பாபு, திவ்யதர்ஷினி, விசித்ரா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தின் டீசர் 2 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியது. ஆனால் வழக்கமான கெளதம் மேனன் படத்தை போல் இந்த படமும் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே கெளதம் மேனன் தரப்பில் துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய முயற்சித்து வரும் நிலையில், அவர் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா திரைப்படம் பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியாக உள்ளது.

Most Popular