Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாஇது புதுசா இருக்கே.. ! சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்.. !

இது புதுசா இருக்கே.. ! சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்.. !

ரங்கூன் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றரை ஆண்டுக்கு முன் உறுதியானது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக இது அமைகிறது. சோனி மற்றும் கமல்ஹாசன் ஆர்.கே.எஃப்.ஐ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஷூட்டிங் செய்யவிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி அதிகாரியாக வருகிறார்.

மாவீரன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவு பெரும் நிலையில் உடனே சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தை தொடரவுள்ளார். இந்த ஆண்டு முழுக்க படப்பிடிப்பு நடக்கவுள்ளது. அடுத்து ஆண்டு கோடையில் ரீலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

பல வட்டாரங்களில் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதாக கூறினர். ஆனால் அப்பேச்சுகள் அனைத்தும் தண்ணீரில் எழுதப்பட்டது போல் ஆகிவிட்டது. அதிகாரபூர்வமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்பணிக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் – ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வமாக இருப்பதாக தன் சமூக வலைதள பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டிருந்தார். சிவகார்த்திகேயன் – ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக கைக்கோற்கின்றனர். புதிய காம்போவைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Most Popular