Friday, April 19, 2024
- Advertisement -
HomeUncategorizedஇப்படியா பண்ணுவிங்க? தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பிரேமம் இயக்குனர்

இப்படியா பண்ணுவிங்க? தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய பிரேமம் இயக்குனர்

- Advertisement -

தமிழ் ,மலையாள சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களிடையே கொடி கட்டி பறந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய நேரம், பிரேமம் ஆகிய திரைப்படங்கள் தமிழகத்தில் பெரிய ஹிட் ஆனது. குறிப்பாக பிரேமம் திரைப்படம் சென்னையில் மட்டும் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை பிரேமம் அப்போதைக்கு படைத்திருந்தது.

இந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்ட் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது
இதில் பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். பிரேமம் படத்திற்கு பிறகு கோல்ட் திரைப்படம் வருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் ஏற்படுத்தியது. ஏற்கனவே இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் இன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனை அடுத்து சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகள் காலை 8 மணிக்கு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். இதனை பார்க்க ஏராளமான ரசிகர்கள் காத்திருந்தனர். படத்திற்கான கே டி எம் வழங்கப்படாததால் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் கோல்ட் திரைப்படம் சென்னையில் 10 மணிக்கு திரையிடப்பட்டது. எனினும் தமிழ் மொழியில் கோல்ட் திரைப்படம் இன்று வெளியாகவில்லை. அதற்கு காரணம் படத்திற்கான டப்பிங் பணிகள் இன்னும் முடிவடையாது தான்  என்று கூறப்பட்டுள்ளது.இதனால் கோல்ட் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் டப்பிங் முழுமையாக முடிக்காமல் ஏன் படத்தின் தேதியை முடிவு செய்துள்ளீர்கள் என்று கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே கோல்ட் திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், பிரேமம், நேரம் ஆகிய படங்களில் இருக்கும் குறைகள் கோல்டு படத்தில் இருக்கலாம்.எனினும் திரையரங்குகளில் வந்து படத்தை பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள் என்று கூறியுள்ளார்.இந்த நிலையில் கோல்ட் திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது. இதில் படம் கலகலப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Popular