Thursday, April 18, 2024
- Advertisement -
Homeசினிமாஹாலிவுட்டில் ஹீரோவாகும் தனுஷ்.. அவெஞ்சர்ஸ் இயக்குனர் வெளியிட்ட தகவல்

ஹாலிவுட்டில் ஹீரோவாகும் தனுஷ்.. அவெஞ்சர்ஸ் இயக்குனர் வெளியிட்ட தகவல்

நெட்பிளக்சில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான தி கிரேமன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ரூசோ சகோதரர்களுக்கு தனுஷ் நெருங்கிய நண்பராக மாறினார். தனுசை தம்பி என்று அழைக்கும் அளவுக்கு இவர்கள் நட்பு மரியாதை, இந்த நிலையில் படத்திற்கான ப்ரமோஷன் பணிக்காக இந்தியா வந்த இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் , ரூசோ சகோதரர்களுடன் பணியாற்றியது மிகவும் எளிதாக இருந்ததாக குறிப்பிட்டார்.

- Advertisement -

திரைப்படத்தை அவர்கள் அணுகும் விதம் பிரமிக்க வைத்ததாகவும் தனுஷ் கூறினார். அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ்க்கு தம்மை எப்படி தெரிய வந்தது என்ற ஆர்வம் தமக்குள் இருந்ததாகவும், படத்தில் நடிக்கும் போது ஒவ்வொருவரிடமும் இது குறித்து கேட்டதாகவும் தனுஷ் கூறினார். இந்த நிகழ்ச்சி பேசிய ரூசோ பிரதர்ஸ், தனுஷ் நடித்த சண்டை காட்சிகள் அட்டகாசமாக வந்திருப்பதாக கூறினார்.

தனுஷ் கடின உழைப்பாளி என்றும் இயக்குனர்கள் சொல்வதை அப்படியே செய்து விடுவார் என்றும் அவர் கூறினார். இந்தியா வந்து ரசிகர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட ரூசோ பிரதர்ஸ், தனுஷ் நடித்த சண்டை காட்சிகளை தாங்கள் பார்க்க நேர்ந்ததாகவும், அதை வைத்து தான் தனுசை நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும் ரூசோ பிரதர்ஸ் கூறினர். தி கிரேமேன் திரைப்படத்தில் நடித்தன் மூலம் ரஜினிகாந்துக்கு பிறகு ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

- Advertisement -

கிரேமன் படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அவர்கள் கூறினர். இதில் நடிகர் தனுஷ் கேரக்டரை தனியாக வைத்து ஒரு படம் செய்யலாம் என்றும் யோசித்து வருவதாக ரூசோ பிரதர்ஸ் கூறினர். இதனைத் தொடர்ந்து தி கிரேமன் படக் குழுவினர் ரூசோ சகோதரர்கள் தனுஷ் ஆகியோருக்கு நடிகர் அமீர் கான் இரவு விருந்து வழங்கி கௌரவித்தார்.

- Advertisement -

Most Popular