Tuesday, March 19, 2024
- Advertisement -
Homeசினிமாகமலுடன் இணையும் அஜித் பட இயக்குனர்! - அடுத்த ப்ரொஜெக்ட் ரெடி!

கமலுடன் இணையும் அஜித் பட இயக்குனர்! – அடுத்த ப்ரொஜெக்ட் ரெடி!

விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் புதிய படம் குறித்து வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

சினிமா, அரசியல் என இரு பிரிவுகளிலும் பிசியாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பின் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் கமல் முழு வீச்சில் சினிமாவில் நடிக்க உள்ளார்.

விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வருமென்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், மதுரை கதைக்களத்தில் கமலை வைத்து ஒரு படம் இயக்க உள்ளேன் என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடியாக அறிவித்தார்.

- Advertisement -

மேலும் கமலின் இந்தியன்-2 படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட இந்த படம் மீண்டும் துவங்கியுள்ளது.

- Advertisement -

ரசிகர்களை மேலும் சந்தோஷப்படுத்தும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது “தீரன் அதிகாரம் ஒன்று” “நேர்கொண்ட பார்வை” “வலிமை” படங்களை இயக்கிய இயக்குனர் எச். வினோத், கமலுடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் முழுக்க முழுக்க அரசியல் கதைகளத்தை பின்னணியாக கொண்டு இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Most Popular