Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமா“ அதை மட்டும் வைத்து எவ்வளவு நாள் தான் அவரும் ஓட்ட முடியும் ! நாமும்...

“ அதை மட்டும் வைத்து எவ்வளவு நாள் தான் அவரும் ஓட்ட முடியும் ! நாமும் கேட்க முடியும் ” – அனிருத் இசையை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்!

தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் இவரை இசையில் அடித்துக் கொள்வதற்கு ஆளே இல்லை என்று, தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலிருந்து தனக்கான இடத்தை தக்க வைத்து வந்தவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

- Advertisement -

இவர் தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும்,தான் ஒரு சிறந்த இசையமைப்பாளர் என்று தனக்கு எடுத்த வாய்ப்பை பயன்படுத்தி காட்டினார். இதனை தொடர்ந்து அவர் இசையமைத்த பசங்க மற்றும் ஈசன் திரைப்படங்கள் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. தற்போதைய காலகட்டத்தில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதால் என்னவோ அதிகமாக மற்ற விஷயமே பலகை பற்றி பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய கலந்துரையாடலில் இசையமைப்பாளர் அனிருத் பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருப்பதன் மூலம் ரசிகர்கள் உடைய எதிர்ப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த கலந்துரையாட உரையாடலில் நெறியாளர் அவரிடம் அவருடைய மீசைக்கான காரணத்தைக் கேட்டார் அதற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ” கொரோனா காலத்தில் வேறு வழி இல்லாமல் எடுக்க பழகிக் கொண்டேன்.தற்பொழுது அது எனக்கு பிடித்து விட்டதால் இவ்வாறு தொடர்கிறேன். ஆனால் எனது மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லை தினமும் சண்டைதான் என்று நகைச்சுவையாக தன்னுடைய பேட்டியை தொடங்கினார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத், இமான் பற்றிய கேள்விக்கு ” இமான் சிறந்த இசையமைப்பாளர் தான் அவர் இன்றும் அவருடைய பலம் மெலடி இசையை தொடர்ந்து வருகிறார் அதேசமயம் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும் தன் இதனால் அவருடைய இசையில் விருந்து படைக்கிறார் ஆனால் அனிருத் அப்படி அல்ல அவருடைய இசை முழுவதும் அதிரடி இசையாக உள்ளது. வேறு இசைகளில் அவர் அதிகம் கவனம் செலுத்தவில்லை அவருடைய முக்கிய நோக்கமாக ரசிகர்களை கவர்வதை இருக்கிறது.

மேலும் அவர் கூறையில் அனிருத்தின் இசை ” குத்து பாட்டுகளுக்கு மட்டுமே அனிருத் இசை சரியாக வரும். இதைக் கொண்டு எத்தனை நாட்கள் ஓட்ட முடியும்? பிரியாணியை ஒரு முறை சாப்பிட்டால் நல்லா இருக்கும் தொடர்ந்து அதையே சாப்பிட்டால் என்னவாகும் ? ரசிகர்கள் ராக் மியூசிக் மட்டும் விரும்புவதால் தொடர்ந்து அதையே கொடுத்து வருகிறார். இதற்கு தயாரிப்பாளரும் இயக்குனரும் தலை சாய்ப்பதால் அவருக்கு வேறு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இதை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனக்கு எது வருகிறதோ அதை மட்டுமே வெளிகாட்டுகிறார். ஆனால் இசையமைப்பாளருக்கு இது அழகு அல்ல” என்று கூறினார்.

இசையமைப்பாளர் அனிருத் குறித்து மேலும் கூறுகையில் ” இசையமைப்பாளர் என்பவர் ஒரு படத்தின் கதைக்கு என்ன தேவையோ? அதை அந்த கதைக்கு ஏற்றவாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு அமைத்து கொடுக்க வேண்டும். ராக் மியூசிக் மட்டும் படத்தின் சிறந்த இசை என ஆகிவிடாது அந்த படத்திற்கு தேவையான மெலடி, குத்துப்பாட்டு பிஜிஎம் மற்றும் பல விஷயங்கள் அதில் இருந்தால் தான் அந்த இசை சிறந்த இசையாக அறியப்படும் ” என்று கூறி தன் வாயாலே தனக்கு வம்பை இழுத்துக் கொண்டு ரசிகர்களிடம் சிக்கி உள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் .

Most Popular