Wednesday, May 15, 2024
- Advertisement -
HomeEntertainmentமூச்சுக்கு 300 தடவை, தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய அட்லி… இது ஷாருக்கான் படமா இல்லை...

மூச்சுக்கு 300 தடவை, தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய அட்லி… இது ஷாருக்கான் படமா இல்லை விஜய் படமா என குழம்பிய அரங்கம்… எப்பா போதும்டா சாமி, ரீல் அறுந்து போச்சு!

ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. தனது முதல் திரைப்படத்திலேயே, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்த இயக்குனர், அடுத்ததாக விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கினார். தெறி, மெர்சல், பிகில் என அவர் அடுத்தடுத்து இயக்கிய படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

- Advertisement -

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரத்தை வைத்து உயரத்திற்கு சென்ற அட்லி, அடுத்ததாக யாருடன் இணைய போகிறார் என்று கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் கைகோர்த்தார் அட்லி. இந்தப் படத்தை நடிகரே தயாரிக்க, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்தும், அவர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் பிரச்சனை குறித்தும் ஜவான் திரைப்படம் பேசுகிறது. இந்த படத்தில், மொட்டை அடித்து மிரட்டலான லுக் உடன் ஷாருக்கான் காட்சி அளித்தார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.

- Advertisement -
Atlee

இந்த நிலையில் ஜவான் படத்திற்கான பிரீ ஈவண்ட் நிகழ்ச்சி, சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், அட்லி, அனிருத், விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாரா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. விழாவில் பேசிய இயக்குனர் அட்லி, தளபதி விஜயுடன் நான் ஆறு மாசத்தில் ஒரு படத்தை முடித்துவிட்டு, அதை ஏழாவது மாசத்தில் ரிலீஸ் செய்வேன். ஆனால் எனக்கு ஜவான் திரைப்படம் அப்படி அல்ல.

- Advertisement -

படம் குறித்த அறிவிப்பின் போதே, கொரோனா காலம் வந்து விட்டதால் பணிகள் அப்படியே முடங்கி விட்டன. நான் எதிர்பார்த்ததை விட ஜவான் படத்தை எடுப்பதற்கு காலம் இழுத்தடித்தது. ஆனா நான் தளபதி விஜயோட ரசிகன். கொடுத்த வாக்கை மீற மாட்டேன். நான் எதிர்பார்த்ததை விட படம் நல்லாவே வந்திருக்கிறது.

ஜவான் திரைப்படம் இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு காரணமே, தளபதி விஜய் அண்ணாதான். நான் ரொம்ப தலைகனத்தோட பேசுறேன்னு, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. ஆனா அது அப்படி இல்ல. நான் என் மனசுல இருந்து பேசுறேன். என்னை எல்லோருக்கும் பிடிக்கும் தெரியும்.

தளபதி விஜய் அண்ணா சொல்ற மாதிரிதான், நெகட்டிவிட்டியை புறந்தள்ளி வையுங்கள். இந்த வாய்ப்பை கொடுத்த ஷாருக்கான் சாருக்கு என் நன்றி. அவர் என் தந்தையை விட முக்கியமானவர் என்று பேசினார். அட்லி பேசியது, இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் ஷாருக்கானை விட விஜயையே அதிகம் புகழ்ந்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular