Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாசுறா ஃப்ளாப் ஆகிடும் என எனக்கு அன்றைக்கே தெரியும்.. ! மனம் திறந்த தமன்னா.. !

சுறா ஃப்ளாப் ஆகிடும் என எனக்கு அன்றைக்கே தெரியும்.. ! மனம் திறந்த தமன்னா.. !

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் 50வது படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அப்படம் தான் சுறா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய இப்படம் விஜய்யின் மைல்கல் படமாக அமைந்ததால் எதிர்பார்ப்புகள் கூடியிருந்தன. ஆனால் அவர்களால் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப படத்தை அளிக்க இயலவில்லை.

- Advertisement -

விஜய், தமன்னா, தேவ் கில், வடிவேலு, ஶ்ரீராம், ரியாஸ், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். மீனவனாக வரும் விஜய் தங்கள் மக்களின் இடங்களுக்கு வரும் சிக்கல்களைச் சமாளித்து அவர்களுக்கு வெற்றிகரமாக புது வீடு கட்டிக் கொடுப்பதே படத்தின் கதை.

இந்தப் படத்தின் கதை பெரிய அளவில் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மட்டுமே தேரும். அதனைத் தவிர்த்து மணி சர்மாவின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இன்றளவும் இப்படத்தை நெட்டிசன்கள் பயங்கரமாக கேலி செய்கின்றனர், குறிப்பாக சுறாவைப் போல விஜய் நீந்தி வரும் காட்சி.

- Advertisement -

சுறா படத்தைக் குறித்து நடிகை தமன்னா

அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமன்னா சுறா படத்தைப் பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, “ சுறா படத்தின் பாடல்கள் சூப்பராக இருக்கும். மிகவும் பிரபலமானது கூட. ஆனால் அந்தப் படம் ஃப்ளாப் ஆகிவிடும் என எனக்கு அன்றைக்கே தெரியும். ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தில் இருந்து விலகிவிட கூடாது என்ற ஒரே கட்டாயத்தின் காரணமாகவே நடித்தேன். ”

- Advertisement -

மேலும் படத்தின் சில காட்சிகளில் தான் ஒழுங்காக நடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் படம் சரியாக ஓடாது என தமன்னா உணர்ததை தளபதி விஜய் உணர்ந்திருந்தால் அஜித் ரசிகர்களிடம் கண்டெட்டாக மாட்டாமல் தப்பியிருப்பார்.

அன்றைய தமம்னாவாக அவர் இன்று இல்லாமல் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ஜீ கார்டா, லஸ்ட் ஸ்டோர்ஸ், ஜெயிலரில் காவாலா பாடல்கள் என அடுத்தடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் ஒப்பந்தம் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

Most Popular