சினிமா

இதுவரை இது மாதிரியான படத்தில் நான் நடித்ததில்லை – ஜவான் படம் பற்றியும் இயக்குனர் அட்லி பற்றியும் மனம் திறந்துள்ள ஷாருக்கான்

விஜயுடன் தெறி மெர்சல் மற்றும் பிகில் என மூன்று வெற்றித் திரைப்படங்களை கொடுத்த பின்னர் தற்பொழுது இயக்குனர் அட்லி பாலிவுட் பக்கம் திரும்பி விட்டார். ஷாருக் கானை வைத்து அவர் ஜவான் திரைப்படத்தை கூடிய விரைவில் இயக்க உள்ளார். தற்பொழுது பதான் படத்தில் நடித்து வரும் ஷாருக்கான் கூடிய விரைவில் அட்லி இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஷாருக்கான் தயாரிப்பில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் நயன்தாரா ப்ரியாமணி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் இத் திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் இத்திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது. மிகப்பெரிய ஆக்சன் படமாக திரைப்படம் வெளிவர இருக்கிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவர உள்ளதாக தகவல் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.

அட்லியை பாராட்டித் தள்ளிய ஷாரூக்கான்

ஒரு இயக்குனர் மற்றும் நடிகருக்கு எந்த வகையான கெமிஸ்ட்ரி இருக்க வேண்டுமோ அந்த கெமிஸ்ட்ரி எங்கள் இருவருக்கும் நன்றாக இருக்கிறது அவருடைய இயக்கத்தில் நடிப்பது எனக்கு சந்தோஷம். அட்லி திரைப்படத்தை பெரும்பாலும் அனைவரும் பார்த்திருப்பார்கள் ஏனென்றால் அவர் சிறந்த கமர்சியல் பொழுதுபோக்கு திரைப்படங்களை எடுப்பார்.

மேலும் இது போன்ற திரைப்படங்களில் நான் இதுவரை நடித்ததில்லை எனவே இது எனக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஒரு நடிகராக ஜப்பான் திரைப்படத்தில் அட்லி இயக்கத்தில் நான் நடிக்க இருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, என்று அட்லியை பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

ஷாருக்கான் தற்பொழுது நடித்து வரும் படம் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவர உள்ளது. அத்திரைப்படமும் மிகப் பெரிய ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top