வீடியோக்கள்

தளபதி விஜயிடம் நான் கதை கூறினேன், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார் – வீட்ல விசேஷம் வெற்றி விழாவில் ஆர் ஜே பாலாஜி பேசிய வீடியோ இணைப்பு

ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கி சமீபத்தில் வெளிவந்த வீட்ல விசேஷம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அத் திரைப்படத்தின் வெற்றி விழாவில் ஆர்ஜே பாலாஜி தளபதி விஜய் இடம்தான் ஒரு கதையை கூறியதாகவும் அதற்கு அவர் என்ன பதிலளித்தார் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தளபதியிடம் 40 நிமிடங்கள் நான் கதை கூறினேன்

இந்த வருடம் ஜனவரி 27-ஆம் தேதி நான் தளபதி விஜயிடம் என்னுடைய கதை ஒன்றை கூறினேன். இரண்டு மாதங்களாக நான் தயார் செய்த மேலோட்டமான ஒரு கதையை அவரிடம் கூறினேன். அதற்கு அவர் நான் உங்களிடம் இருந்து மூக்குத்தி அம்மன் போன்ற கலகலப்பான குடும்ப படம் எதிர்பார்த்தேன் ஆனால் இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்று கேட்டார்.

சரி இத்திரைப்படம் எப்பொழுது பண்ணலாம் என்று அவர் கேட்ட பொழுது நான் அவரிடம் ஒரு வருடம் ஆகும் என்று சொன்னேன். ஒரு வருடமா என்று அவர் பதிலுக்கு கேட்டார். அதற்கு நான் தற்பொழுது வெளியான ரீமிக்ஸ் திரைப்படமான வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு ஐந்து மாதங்கள் எடுத்துக் கொண்டோம் அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களைப்போன்ற ஒரு பெரிய ஹீரோவை வைத்து பெரிய படம் செய்கையில் எங்களுக்கு அவ்வளவு காலம் தேவைப்படும் என்று கூறினேன்.

அதற்கு அவர் இந்த கதையை மட்டுமல்ல எந்த கதை வேண்டுமானாலும் என்னிடம் வந்து தாராளமாக கூறுங்கள் என்று சம்மதம் தெரிவித்ததாக ஆர்ஜே பாலாஜி நம்மிடம் கூறியுள்ளார். மேலும் தளபதி 67 இல்லை என்றால் என்ன தளபதி 77 அல்லது தளபதி 88வது படத்தை நான் இயக்குவேன் என்று விஜய்யிடம் கூறியதாகவும் நம்மிடம் கூறியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வரும் நாட்களில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் நிச்சயமாக அனைவராலும் ரசிக்கும் படியாக உருவாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது எவ்வளவு விரைவில் நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top