வீடியோக்கள்

வெளியானது ஜீவி 2 டீசர் : விறுவிறுப்பான அறிவியல் கலந்த த்ரில்லர் – வீடியோ இணைப்பு

Jiivi 2

தொடர்பியல் முக்கோண அறிவியல் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு வெளியான ஜீவி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு குடும்பகளுக்கு இடையில் நடக்கும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் இதன் கதைக்களம். இந்த திரைபடத்தின் கதை மற்றும் திரைக்கதையை பாபு தமிழ் எழுதினார். இயக்குனராக வி.ஜே.கோபிநாத் செயல்பட்டார். அறிவியல் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த இந்தப் படம் வர்த்தக ரீதியாகவும் நல்ல லாபத்தை திரட்டியது.

முக்கிய வேடங்களில் எட்டு தோட்டாக்கள் நாயகன் வெற்றி, கருணாகரன் மற்றும் மிமீ கோபி நடித்தனர். வீட்டை விட்டு வெளிய தங்கியிருக்கும் நாயகன் மற்றும் அவரது நண்பர் இருவரும் வறுமை காரணமாக தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரின் நகைகளை திருட முயற்சிக்கின்றனர். அந்தத் திருட்டுக்குப் பின், படத்தின் ஹீரோ இந்த தொடர்பியல் முக்கோண விதி தன் வாழ்கையில் விளையாடுவதைக் கண்டுபிடிக்கிறார்.

ஒரே மாதிரியான த்ரில்லர் திரைப்படங்கள் வந்த வேளையில் இது சற்று வித்தியாசமான படைப்பாக அமைகிறது. அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என ரசிகர்களை சீட்டின் விளிம்பில் அமைத்திய திரைக்கதை தான் இந்த படத்தின் பெரிய பிளஸ். வெகு நாட்களாக ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அவர்கள் விரும்பியதை டீசராக அமைத்து இன்று ( ஜூலை 2 மாலை ) வெளியிட்டுள்ளது படக்குழு. மாபெரும் வெற்றிப்படமான மாநாடு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார். டீசரைப் பார்க்கையில் முதல் பாகத்தைப் போல இதுவும் பணத்தை மையமாக கொண்ட த்ரில்லர் படமாக தெரிகிறது. அறிவியல் கலந்த த்ரில்லர் என்றாலே சற்று விறுவிறுப்பாக தான் இருக்கும். மேலும், டீசரில் கருணாகரன் “ ஏன்டா எல்லா பிரச்சனையும் பொண்ணுங்களுக்கே வருது ” என்கிறார். அதோடு பெண்கள் ஏதோ பெரிய ஆபத்தில் மாட்டிகொண்டு அலறுவது போல இரண்டு காட்சிகள் டீசரில் வைக்கப்பட்டுள்ளது.

பணம் மட்டுமில்லாமல் ஹீரோவின் உடன்பிறந்தோர் அல்லது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை வைத்து படம் தயாராகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீசரை ‘ வி ஹவுஸ் புரொடக்ஷன் ‘ யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top