வீடியோக்கள்

வெளியானது பொன்னியின் செல்வன் டீஸர் ! பாகுபலியை மிஞ்சும் காட்சிகள் – வீடியோ இணைப்பு

Ponniyin Selvan

இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர், பிரசாந்த் நீலின் கே.ஜி.எப் படங்கள் ரிலீசாகி பிரம்மாண்ட வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இதே போல் நம் கோலிவுட்டிலும் ஒரு பிரம்மாண்ட படைப்பு தயாராகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வேலைகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் புரோமேஷனில் படக்குழு தீவிரமாக பணிபுரிந்து வருகிறது.

சோழர்கள் மீண்டும் வருகிறார்கள் !

சென்னையில் பல பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையில் மணிரத்னம் & கோ இதை ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீஸர் யூடியூபில் மாலை 6 மணிக்கு வெளியானது. ஆனால் அதற்கு முன்பே சமூக வலைதளங்களிலகாl வழக்கம் போல லீக் ஆனது. டீசரில் காட்சிகள் அனைத்தும் ஃபர்ஸ்ட் கிளாஸ். இதில் மணிரத்னம் கில்லாடி. அதில் விக்ரமுக்கு மட்டுமே வசனம் இருந்தது. மற்ற காதாப்பதிரங்கள் அனைத்தும் டீஸர் முழுவதும் அங்கங்கு காட்டப்படுகின்றன. அது தவிர போர் சண்டைக் காட்சிகள் மட்டுமே அதில் பெரும்பாலாக இருந்தது.

படத்தின் இசையமைப்பு வேலைகளை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துக் கொள்கிறார். டீசரில் அவரது இசை சிறப்பாக இருந்தது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி என்றும் நிலை தவறியதே இல்லை. இந்தப் படத்தின் கதை 1995ஆம் ஆண்டு கல்கி அவர்கள் எழுதிய நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் மற்றும் இளங்கோ குமரவேல் திரைக்கதை அமைக்கிறார்கள். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் பல பிரபல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி சிறப்பிக்கின்றனர். பெண்கள் கதாப்பாத்திரத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும் குந்தவியாக திரிஷாவும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஷ்வர்யா லட்சுமி என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் அபார வெற்றியைப் பெரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top