Wednesday, May 1, 2024
- Advertisement -
HomeEntertainmentஎல்சியூ-வில் அஜித் சாரை அழைத்து வர ஆசை… மனம் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்… தலை, கால்...

எல்சியூ-வில் அஜித் சாரை அழைத்து வர ஆசை… மனம் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்… தலை, கால் புரியாமல் துள்ளும் ஏ.கே. ரசிகர்கள்…

திரைத்துறைக்கு வந்து குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்த அவர், அதனை ஓரங்கட்டிவிட்டு சினிமா கனவோடு சென்னைக்கு பயணமானார். இது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், எனக்கு வங்கி பணியில் பெரிய அளவு விருப்பமில்லை. அங்கு இருந்தால் சட்டை பட்டனிலிருந்து எல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஆனால், எனக்கு முதல் இரண்டு பட்டன்களை போடவே பிடிக்காது என்று கூறியிருந்தார். சென்னைக்கு வந்து குறும்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த அவருக்கு, சரியான நேரத்தில் மாநகரம் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

தனது முதல் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த லோகேஷ், மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத கதையை சுவாரஸியத்துடன் கொடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதன்பிறகு கார்த்தியை வைத்து கைதி, தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர், உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என அவரது பயணம் ஏறுமுகமாகவே இருந்தது. இதில் கைதி திரைப்படம், ஒரே இரவில் நடப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

மாஸ்டர் திரைப்படத்தை முழுக்க முழுக்க விஜய் ரசிகர்களுக்காக எடுத்து உற்சாகமூட்டிய லோகேஷ், விக்ரமில் மீண்டும் தனக்கான பாதையில் திரும்பி சூப்பர் ஹிட் வெற்றியை சொல்லி அடித்தார். இதில் அவர் அறிமுகப்படுத்திய எல்.சி.யூ. கான்செப்ட் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது அவர் தளபதி விஜய்யுடன் மீண்டும் இணைந்து லியோ படத்தை எடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம், வரும் 19-ம் தேதி ரிலீசாகிறது.

- Advertisement -

இது தொடர்பாக சமீப நாட்களாகவே பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கும் லோகேஷ் பேட்டி கொடுத்து வருகிறார். அதன்படி தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருப்பதாவது, மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை தமிழில் எடுக்க திட்டமிட்டிருந்தேன். இதில் சூர்யாவையும், கார்த்தியையும் நடிக்க வைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டேன். ஆனால் அந்த திட்டம் கைகூடவில்லை. எனது விக்ரம் திரைப்படத்தை தளபதி விஜய் பார்த்தார். அவருக்கு சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அவரை கேரக்டரை எடுத்து சென்றவிதம் சூப்பராக இருந்தது என்று விஜய் தெரிவித்தார்.

- Advertisement -

அரசியலை பொறுத்தவரைக்கும் விஜய் தெளிவான மனநிலையில் இருக்கிறார் என்றே நினைக்கிறேன். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர் பரிசளிக்கும்போது, 13 மணி நேரம் அவர் தொடர்ந்து மேடையில் நின்றபடியே இருந்தார். இதனால் அடுத்த நாள் சூட்டிங்கிற்கு அவர் வரமாட்டேன் எனக் கூறுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் சரியாக 7 மணிக்கு அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். தலைவர் 171வது படத்திற்கு நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று கூறினார். பேட்டியின்போது, எல்சியூ கான்செப்ட்டில் இதுவரை நீங்கள் இணையாத நடிகர்களை சேர்க்க வேண்டும் என்று விரும்பினால், அது யாராக இருக்கும் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு சிறிதும் யோசிக்காமல், அஜித்துடன் நான் பணியாற்ற விரும்புவதாக லோகேஷ் பதில் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Most Popular