பொழுதுபோக்கு

வெங்கட்பிரபுவின் நேரடி தமிழ்-தெலுங்கு திரைப்படத்திற்கு கைகோர்த்துள்ள இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி – உற்சாகத்தில் ரசிகர்கள்

இளையராஜா பாடல் இல்லாத பிளேளிஸ்ட் எந்த தொலைபேசியிலும் இருக்காது. அந்த அளவுக்கு அவரது பாடல் அனைவர் தொலைபேசியிலும் இருக்கும். அவருடைய பழைய பாடல்களை இன்று கேட்டால் கூட புதிய உணர்வை உற்சாகத்தை நமக்கு கொடுக்கும். இருப்பினும் இளையராஜா தற்பொழுது மிக குறைவான படங்களில் மட்டுமே பணியாற்றி வருகிறார்.இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தற்போது கிடைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்க உள்ள தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைக்கப் போகிறார். அதிலும் ஒரு சர்ப்ரைஸ் நமக்கு கிடைத்துள்ளது.

இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா கூட்டணி

வெங்கட் பிரபு இயக்கம் தமிழ் திரைப்படங்கள் ஆந்திராவில் நல்ல வரவேற்பு பெறும். தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கே இவரது படங்கள் நல்ல வரவேற்ப்பை பெறுவதைத் தொடர்ந்து தற்பொழுது நேரடியாக தமிழ்-தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழியிலும் படம் இயக்கப் போகிறார்.

நாக சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் பெயரிடப்படாத படத்திற்கு இன்று பூஜை நடந்து முடிந்தது. இத்திரைப்படத்தை ஸ்ரீனிவாச சித்தூரி தயாராக உள்ளார். இத்திரைப்படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்க போகின்றனர். இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்க போவதால் இத்திரைப்படம் மீது தற்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் மகன்தான் வெங்கட் பிரபு. தற்பொழுது தனது பெரியப்பாவை முதல் முறையாக தனது படத்தில் வெங்கட்பிரபு இசையமைக்க வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பூஜையில் இன்று சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் மூலம் வெங்கட்பிரபு தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமாகிறார். அதேபோல நாகசைதன்யா இந்த திரைப்படம் மூலம் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு அறிமுகமாகிறார்.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top