டிவி

“இதுதான் என் கடைசி சீசன்,,,,” – மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளியில் இருந்து விலகும் மற்றொரு நட்சத்திர போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி . சின்னத்திரை பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் வெகுவான ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . தற்போது இந்த நிகழ்ச்சியை நான்காவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் . இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பிரபல சமையல் கலைஞர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர் . இந்த நிகழ்ச்சியை விஜே ரக்சன் தொகுத்து வழங்கி வருகிறார் .

இந்த நிகழ்ச்சியில் சமையல் கலைஞர்களுடன் கோமாளிகள் அடிக்கும் லூட்டியை காணவே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருப்பார்கள் . கடந்த இரண்டு வாரங்களாக செலிப்ரேஷன் வாரமாக நடந்து கொண்டிருந்த குக் வித் கோமாளி இந்த வாரத்தில் இருந்து மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது . நிகழ்ச்சி ஆரம்பமாகும் போதே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன .

Advertisement

கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருந்த சூப்பர் சிங்கர் புகழ் சிவாங்கி இந்த சீசனில் குக்காக அறிமுகமாகி பலவிதமான டிஷ்களையும் செய்து ரசிகர்களையும் நடுவர்களையும் ஆச்சரியமடைய செய்தார் . இவர் செய்தவற்றில் சில சமையல்கள் சொதப்பினாலும் பெரும்பாலானவை நன்றாகவே இருந்தது .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரையின் புகழ்பெற்ற தொகுப்பாளரும் குக் வித் கோமாளி போட்டியாளருமான மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது . அதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு மற்றொரு செய்தி அதிர்ச்சியாக வெளியாகி இருக்கிறது .. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் சிவாங்கி இதுதான் தனது கடைசி சீசன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார் .

Advertisement

ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அவர் இதுதான் தனது கடைசி சீசன் என்றும் அடுத்த சீசனில் இருந்து தான் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார் . மணிமேகலையும் ஏற்கனவே விலகிய நிலையில் தற்போது சிவாங்கியம் உலகை இருப்பது குக் வித் கோமாளி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top