சினிமா

2022 ஆம் ஆண்டின் டாப் பிரபல இந்திய நட்சத்திரங்கள்..  முதலிடம் யார் தெரியுமா?

திரையுலகை பொறுத்தவரை முதலிடம் என்பது நிரந்தரம் இல்லாத ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையாக அது மாறுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது இந்த ஆண்டிற்கான டாப் 10 பாப்புலர் இந்தியன் ஸ்டார் பட்டியல் வெளியாகி உள்ளது. IMDB இணையத்தளம் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி போன்ற எல்லா மொழிகளில் உள்ள நட்சத்திரங்களுடைய பெயர்களும் இடம்பெற்றிருக்கிறது. இதில் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் முன்னணி நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த தமிழ் படங்கள் மட்டுமல்ல. இவர் ஹாலிவுட்ல நடித்த தி கிரேமேன் என்ற திரைப்படத்தின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.
நடிகர் தனுஷ் இதுவே இவர் இந்த பட்டியலில் முதலிடம் படிப்பதற்கு பெரும் காரணமாக அமைந்திருக்கிறது.

மேலும் அலியா பட் ,ஐஸ்வர்யா ராய் பச்சன், ராம்சரண் , சமந்தா ,ரித்திக் ரோஷன் ,கியாரா அத்வானி ஜூனியர் என்டிஆர் ,அல்லு அர்ஜுன் மற்றும் யாஷ் ஆகியோர் முதல் பத்து இடத்தை படித்திருக்கிறார்கள்.

இதில் ஆலியா பட் ராம்சரண்  மற்றும் ஜூனியர் என்டிஆர் மூவரும் இணைந்து நடித்த ட்ரிபிள் ஆர் திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்றதை இவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்க பெரும் காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த பட்டியில் இடம்பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட கால கனவும் தற்பொழுது என் நினைவுமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்து மீண்டும் தனக்கென்று பல ரசிகர்களை திரட்டினார்.

நடிகை சமந்தா தமிழ் சினிமாவிலேயே பெருமளவு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவருக்கு டோலிவுட்டிலும் பெரும் வரவேற்பு இருக்கிறது இவர் சமீபகாலமாக தன்னுடைய சினிமா உலகிற்காக நிறைய உடல் உழைப்பையும் செய்து வருகிறார் இதுவே இவர் பாராட்டுவதற்குரிய நடிகையும் ஆவார்.

தெலுங்கு சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் மூலம்  தமிழ், மலையாளம் ,ஹிந்தி ஆகிய மொழிகளால் உலக சினிமாவையும் தன் வசம் கொண்டது இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்க காரணம் ஆகும்.மேலும் நடிகர் யாசிற்கு கே ஜி எஃப் திரைப்படம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதன் மூலம் இவரும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பட்டியலில் தமிழக நடிகர்கள் விஜய் அஜித் சூர்யா ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .இதனால் இந்த பட்டியலில் நண்பர்கள் தன்மையை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top