Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇத தான் ரஜினி மேடையில் மறைமுகமாக சொன்னாரா ? அனிருத் - காவியா மாறன் திருமண...

இத தான் ரஜினி மேடையில் மறைமுகமாக சொன்னாரா ? அனிருத் – காவியா மாறன் திருமண செய்தி.. !

கோலிவுட் இசையமைப்பாளர்களில் தற்போது கொடிகட்டி பரப்பவர் அனிருத். அஜித், விஜய், ரஜினி, கமல், ஷாரூக் கான் என பெரிய ஸ்டார்கள் அனைவரும் இவரது இசையில் படம் செய்ய மும்முரமாக இருக்கிறார்கள். இவரது இசையில் ஜெயிலர் திரைப்படம் கிளாசாக மாஸாக அபார வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சினிமாத்துறை ஒருபக்கம் இருக்க அண்மையில் அவரது கல்யாண செய்தி குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு முன் அனிருத் இசையில் தொடர்ச்சியாக பாடல்கள் பாடிய ஜோனிட்டா காந்தியை காதலிப்பதாக பரவிய தகவல்கள் அனைத்தும் வதந்தி என அப்போதே தெரியும்.

தற்போது மிகப் பெரிய தயாரிப்பாளரின் மகளுடன் அனிருத் திருமணம் முடிக்க போவதாக கூறுகின்றனர். சன் நிறுவனத்தின் ஓனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறன் தான் அப்பெண் என்கின்றனர். இது வதந்தியா அல்ல உண்மையா எனத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 4 மாதத்திற்கு முன்பே இப்பேச்சு மக்களிடையே சென்றது ஆனால் பெரிதாக யாரும் நம்பவில்லை.

- Advertisement -

இன்று டிவிட்டரில், அடுத்து கோலிவுட்டில் ஒரு பெரிய திருமண அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என டிஜிட்டல் சினிமா நிருபர் அபிஷேக் ராஜா பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவையடுத்து தான் அனிருத் – காவ்யா மாறன் செய்திகள் வலம் வந்தன. பல நாட்களாகவே அனிருத்தும் காவ்யா மாறனும் டேட்டிங் செய்து வந்ததாக சொல்கிறார்கள்.

- Advertisement -

மேலும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் அவர்கள் அனிருத்தை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி மேடையிலேயே சிரித்துக் கொண்டே சொன்னார். இதில் மறைமுகப் பொருள் இருப்பதாக சில நெட்டிசன்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த செய்து வந்தியாக கடந்து செல்லும் அல்ல உண்மையாக மாறுமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம் சிலர் அடுத்து கோலிவுட்டில் வெளியாகும் திருமணச் செய்தி 40 வயதான திரிஷாவின் செய்தியாக இருக்கும் என நினைக்கிறார்கள். இந்த வாரத்தில் அந்த புதிய கோலிவுட் ஜோடி யார் என்பது தெரிந்துவிடும்.

Most Popular