Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமா" சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா வாய்ப்பு என்னால் தான் கிடைத்தது " - பயில்வான் ரங்கநாதன்...

” சில்க் ஸ்மிதாவிற்கு சினிமா வாய்ப்பு என்னால் தான் கிடைத்தது ” – பயில்வான் ரங்கநாதன் பேச்சு

இயக்குனர்கள் இவரிடம் எதிர்பார்ப்பது எல்லாமே இவர் வழங்குவார். கவர்ச்சி என்றால் சில்க், சில்க் என்றால் கவர்ச்சி என்றவாறு அந்த காலகட்டங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவருக்கான பட வாய்ப்புகளும் தொடர்ந்து குவிந்து கொண்டிருந்தன. நடிகர்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு இவருக்கான சம்பளம் அன்றைய தேதியில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.

- Advertisement -

இன்றளவும் அதற்கான உண்மைக் காரணம் என்ன என்பது தெரியாமல் மர்மமாகவே உள்ளது. அவ்வப்போது அவர் மரணம் குறித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகள் வெளி வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து அவருடைய யூடியூப் பக்கத்தில்பேசி உள்ளார்.

சில்க் ஸ்மிதாவின் மரணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசும்போது “சில்க் ஸ்மிதாவின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம். டாக்டரான அவர் அளவுக்கு அதிகமான போதை ஊசிகளை போட்டு அவரை போதைக்கு அடிமையாக்கிவிட்டார்.சில்க் ஸ்மிதா சினிமாவுக்குள் வர நானும் ஒரு முக்கிய காரணம். நான் மாயா என்கிற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது, சில்க் ஸ்மிதாவின் கவர்ச்சி புகைப்படத்தை அதில் போடுவேன். அதனால்தான் அவருக்கு வண்டிச்சக்கரம் என்னும் முதல் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் இயக்குனர் வினு சக்கரவர்த்தி. இதனால் சில்க் ஸ்மிதா என்மீது நன்கு மரியாதை வைத்திருந்தார். எனக்கும் படங்களில் நடிக்க சான்ஸ் வாங்கி கொடுத்ததோடு, எனக்கு ஜோடியாகவும் நடித்தார்” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் கூறும்போது “சில்க் ஸ்மிதா இயல்பாகவே ஒரு வெள்ளந்தியானவர். அவர் சம்பாதித்ததை அவரது சித்தியும், அத்தையும் அவரிடம் இருந்து அபகரித்துவிட்டார்கள். சில்க் ஸ்மிதாவின் கண்ணே கதை சொல்லும், அந்த அளவும் ஈர்ப்பு கொண்டவர்.
கவர்ச்சி நடிகையாக அறிமுகமானதால் ஆரம்பத்தில் கவர்ச்சி வேடங்களில் அதிகளவில் நடித்தார். ஆனால் அவர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர். கதாநாயகிகள் 40 படத்தில் நடித்து சம்பாதிப்பதை அவர் வெறும் நான்கு படங்களில் சம்பாதித்து விடுவார். சினிமாவில் சில்க் ஸ்மிதாவை பயன்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் ரொம்ப பெருசு ” என்று கூறியவர் அந்த லிஸ்ட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருடைய சர்ச்சைக்குரிய பேச்சின் மேல் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

- Advertisement -

Most Popular