சினிமா

‘துணிவு’ அப்டேட்: படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் குமார் நடித்து வரும் படம் ‘துணிவு’. இதற்கான இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

‘துணிவு’ படத்தின் கதை லூதியானாவில் நடக்கும் வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் வருகின்றன. அஜித் குமார் மீண்டும் நெகட்டிவ் ரோலில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தி இருந்தாலும், கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத் வருகிறார் எனவும் தெரிகிறது.

துணிவு படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரேம்குமார், அஜய், வீரா, சிபி, பாவணி, அமீர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என நடிகர் ஆர்கே சுரேஷ் ஏற்கனவே பதிவிட்டதை அடுத்து, தற்போது படக்குழுவினர் அதனை உறுதி செய்துள்ளனர்.

படத்தின் ரிலீஸுக்கான அதிகாரப்பூர்வ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகும். தியேட்டர் வினியோகஸ்து உரிமம், சாட்டிலைட் உரிமம் ஆகியன பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top