Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainment'நான் விட்ட குறட்டைல என் காதல் கோட்டை சுக்கலா நொறுங்கிடுச்சு' குறட்டையால் அவதிப்படும் கதாநாயகன்… இயக்குனரின்...

‘நான் விட்ட குறட்டைல என் காதல் கோட்டை சுக்கலா நொறுங்கிடுச்சு’ குறட்டையால் அவதிப்படும் கதாநாயகன்… இயக்குனரின் வித்தியாசமான முயற்சியால் கவனம் ஈர்க்கும் குட் நைட் டீசர்!

ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு குட் நைட் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த படத்தின் கதை மற்ற படங்களின் கதைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. குறட்டை விடுவதால் நாயகன் என்னென்ன பாடுபடுகிறான், அவனால் சுற்றியிருப்பவர்களுக்கு என்னென்ன அவஸ்தை ஏற்படுகிறது என்பதைப் பற்றிய காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது குட்நைட்.

- Advertisement -

குறட்டை விட்டால் தூக்கமே போச்சு அந்த படத்துக்கு வைக்குறாங்க பாருங்க டைட்டில் குட் நைட்னு என ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்த கதையின் போக்கே மிக சுவாரஸ்யமாக இருப்பதாலும், இந்த பிரச்னை இங்கு முக்கால்வாசி நபர்களுக்கு இருப்பதாலும் இந்த படத்தை பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதுமட்டுமின்றி வழக்கமாக சீரியஸான கதாபாத்திரத்தில் பார்த்து வந்த மணிகண்டன் இந்த படத்தில் முழு நேர காமெடி பண்ணியிருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கும் இந்த படத்தில் மணிகண்டனுடன் மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி, ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

- Advertisement -

குறட்டை விடுவதை வீட்டில் அலாரம் அலறுவது போல பாவித்து ஒரு பர்ஸ்ட் லுக்கையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது படக்குழு. இதனை பார்க்கும்போதே நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் கிரியேட்டிவாகவும் இருந்தது. குறட்டை என்பதை முதலில் காமெடியாகவும் பின் அதன் பின்னர் இருக்கும் சீரியஸான பிரச்னையையும் எடுத்து கூறியிருக்கிறார் இயக்குநர்.

- Advertisement -

தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. டீசர் தொடக்க காட்சியிலேயே குறட்டையால் அலுவலகத்தில் மாட்டிக்கொள்ளும் நாயகனின் காதலும் குறட்டையால் பிரியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ‘நான் விட்ட குறட்டைல என் காதல் கோட்டை சுக்கலா நொறுங்கிடுச்சு’ என்ற வசனம் படம் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது. படம் மே மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular