Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது? விவரம் உள்ளே

ஜெய்லர் படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது? விவரம் உள்ளே

ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படமான ஜெய்லர் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரஜினியின் கடைசி திரைப்படம் நவம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. எதிர்பார்த்த அளவு படத்தின் வசூல் அமையவில்லை. இது ரஜினிக்கு தோல்வியாக பார்க்கப்பட்டது.

இதேபோன்று கடந்த ஆண்டு ரஜினிக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய எதிர்பார்ப்பில் நடிகர் ரஜினி இருக்கிறார். ரஜினியின் சக போட்டியாளரான நடிகர் கமல் தற்போது முதல் இடத்தில் வசூலில் இருக்கிறார்.

- Advertisement -

சிறப்பு திட்டம்

இதனால் ஜெய்லர் திரைப்படத்தில் இழந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினி சிறப்பு திட்டங்களை போட்டு இருக்கிறார். அதன்படி தமிழகத்தை தவிர மற்ற ஊர்களிலும் நல்ல வசூல் பெற வேண்டும் என்பதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள பெரிய நட்சத்திரங்களை இந்த படத்தின் நடிக்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

இசை வெளியிட்டு விழா

இதன் மூலம் மற்ற மாநிலங்களிலும் படம் வசூல் பெரும் என்ற இந்த திட்டம் கைகொடுக்குமா என்பது தற்போது பார்க்க வேண்டும். இதனால் ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலை 23ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்திருக்கிறது. தற்போதெல்லாம் இசை வெளியீட்டு விழா மூலம் தான் படத்தின் ப்ரோமோஷனை தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்கிறது.

இதனால் ஜெய்லர் திரைப்படத்தை பெரிய லெவலில் நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதேபோன்று படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களே தற்போது வெளியான நிலையில் ஜெய்லர் படத்தை ஏன் தாமதம் செய்கிறீர்கள் என்று ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Most Popular