Monday, June 17, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினி ரசிகர்களுக்கு சவால் விட்ட ப்ளூ சட்டை மாறன்..! இடத்தை அறிவித்து மோத ரெடி என...

ரஜினி ரசிகர்களுக்கு சவால் விட்ட ப்ளூ சட்டை மாறன்..! இடத்தை அறிவித்து மோத ரெடி என அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாறுபட்ட நடிப்பில் ,புதிய உச்சத்தை தொடும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் திரைப்படம் ,ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது.

- Advertisement -

இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இதற்கு முன்பு தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கி ,ரசிகர்களின் கலவையான விமர்சனங்களால்  கதி கலங்கி போனார். அதனை ஈடு செய்யும் விதமாக வெறித்தனமாக உழைத்து, ரசிகர்களை முழுவதுமாக திருப்தி படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஜெயிலர் படத்தை உருவாக்கியுள்ளார்.

ஜெய்லர் படத்தை பற்றி வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 10 என்று வரும் என்று பண்டிகையை எதிர்பார்த்து காத்திருக்கும் குழந்தைகள் போல் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சில நிறுவனங்களோ ஒரு படி மேலே போய் படம் வெளியாகும் நாள் அன்று நிறுவனத்திற்கு விடுமுறையை அளித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஜெயிலர்  படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரு பக்கம் படத்தின் டிரைலரை போட்டு தாக்கி படத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது என்றால், மறுபக்கம் ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு ஜெயிலர் பணத்தை புரொமோட் செய்து வருகிறார்! !!
திரைப்படங்கள் வெளிவந்தவுடன் அப்படங்களை பார்த்துவிட்டு!? அப்படத்தைப் பற்றிய ஏற்ற இறக்கங்களை அலசி ஆராய்ந்து கலாய்ப்பது ப்ளூ சட்டையின் வேலை. பல தயாரிப்பாளர்களின் சாபத்திற்கு ஆளானவர் இந்த ப்ளூ சட்டை.

- Advertisement -

அது ப்ளூ சட்டை யா இல்லை பச்சை சட்டையா என்று தனியாக ஒரு ரிவ்யூவே வைக்க வேண்டும். ஆனாலும் “தலைக்கு தில்ல பாத்தியா” என்று அவரை ரசிப்பவர்கள் உண்டு.!!
இப்போது ப்ளூ சட்டைக்கு என்ன வந்ததோ தெரியவில்லை ரஜினியை பற்றி தாறுமாறாக கருத்துகளை பதிவிட்டு மருமகளை கண்ட மாமியார் போல் ,எது செய்தாலும் குற்றம் -!எது சொன்னாலும் தவறு?? என்று வம்பு இழுத்து வருகிறார்!!

அவர் ஏற்கனவே ரஜினிக்கு வயதாகிவிட்டது சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் அவருக்கு இனிமேல் தகுதி இல்லை என்று கூறி வாங்கி கட்டிக் கொண்டார்..இப்பொழுது ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய பருந்து காகத்தின் கதையை, திசை மாற்றி நடிகர் விஜய்யை தான் ரஜினி “காக்கா “என்று குறிப்பிடுகிறார் என்று இவர் பங்குக்கு கொளுத்தி போட்டார்.

களவாணி கன்னையா பாடலும் விஜய்க்கு எதிரான கருத்துகளையே சொல்வதாக கூறி மீண்டும் குட்டையை குழப்பினார்.
இப்பொழுது தமிழ் திரை உலகில் பொன்னியின் செல்வன் விக்ரம் 2 மட்டுமே 500 கோடி லாபம் பார்த்த படங்கள் எந்திரன் 2 எல்லாம் அருகில் கூட நெருங்க முடியாது என்று தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பாபா படம் மிகப்பெரும் தோல்வி என்று அப்படத்தின் கதாநாயகியான மனிஷா கொய்ராலாவே சொல்வது போல் உள்ள காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்..
ஒன்றா !இரண்டா! கோபங்கள்!!! என்று பொங்கிய ரசிகர் ஒருவர், ப்ளூ சட்டையின்  பீட்டர் பக்கத்தில்  உன்னை வெளியில் பார்த்தால் “கலப்பு”” சலப்பு “என்ற அடித்து விடுவேன் என்று பகிரங்கமாக பதில் அளிக்க!!

அதற்கு ப்ளூ சட்டை ஜெயிலர் படம் பார்க்க, நாலு மணி ஷோவுக்கு மாயாஜால் வருவேன் ,!உனக்கு தில் இருந்தா என்னை அங்கு வந்து அடி !!என்று இறுமாப்புடன் கூறியுள்ளார்!!?
குறுக்கே இந்த கௌசிக் வந்தா?? என்று ப்ளூ சட்டை செய்யும் அலப்பறைகளை பார்த்து, மாயாஜாலில் நடக்கப் போகும் மாயம் என்ன?? என்று இரட்டிப்பு ஆவலுடன் காத்துக் இருக்கிறார்கள் ரசிகர்கள்!!!

Most Popular