Tuesday, May 14, 2024
- Advertisement -
Homeசினிமாஜெய்லர் படத்தில் நெல்சன் மிரட்டி இருக்காரு! - புது ரஜினியை பார்ப்பீங்க!

ஜெய்லர் படத்தில் நெல்சன் மிரட்டி இருக்காரு! – புது ரஜினியை பார்ப்பீங்க!

- Advertisement -

இயக்குனர் நெல்சன் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தயாரித்து இருக்கும் படம் ஜெய்லர். ரஜினியின் அண்ணாத்த தோல்விக்கு பிறகு இந்த திரைப்படம் திரைக்கு வர உள்ளதால் மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் ரஜினி உள்ளார். இதேபோன்று பீஸ்ட் திரைப்படமும் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவிய நிலையில் நெல்சனும் கம்பேக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் தற்போது இரவு பகலாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் படம் குறித்து இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வசந்த் ரவி அளித்த பேட்டி தற்போது ரஜினி ரசிகர்களை குஷி படுத்திருக்கிறது. அதில் பேசிய அவர் நெல்சன் இந்த படத்தில் சிறப்பு மிக்க பணியை செய்திருக்கிறார்.

- Advertisement -

ரஜினி சார் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ரஜினி சார் 168 படங்களில் இதுவரை நடித்திருக்கிறார். அதில் பார்க்காத ரஜினியை இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்த படம் நிச்சயம் பட்டையை கிளப்பும். நாங்கள் இந்த படத்திற்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம்.

- Advertisement -

இது என்னுடைய கனவு திரைப்படம். ரஜினி சாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகர்களின் ஆசையாக இருக்கும். இதேபோன்று இயக்குனர் நெல்சனுக்கும் ரஜினி சாரை இயக்க வேண்டும் என்று ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். ஆனால் அது என்ன என்று வெளியே சொல்ல முடியாது என்று நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார். இந்தப் போட்டி நடிகர் ரஜினியின் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

Most Popular