Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவிக்ரம் டெலிடட் சீன் மாதிரி இருக்கே.. ஜெய்லர் படத்தின் ரத்தமாரே பாடலை ஓட்டும் ரசிகர்கள்

விக்ரம் டெலிடட் சீன் மாதிரி இருக்கே.. ஜெய்லர் படத்தின் ரத்தமாரே பாடலை ஓட்டும் ரசிகர்கள்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியாக உள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் காட்சி மற்ற ஊர்களில் காலை 6 மணிக்கு வெளியிடப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒன்பது மணிக்கு தான் முதல் காட்சி போடப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தமிழகத்தில் முதல் தியேட்டராக சென்னை கமலா திரையரங்கில் ஜெய்லர் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதனை அடுத்து வில்லிவாக்கத்தில் உள்ள நாகமுனி என்ற திரையரங்கிலும் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஞாயிறு அல்லது திங்கள் கிழமை தமிழக முழுவதும் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ரத்தமாரே என்ற பாடலின் காட்சிகளை பட குழு வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

இதில் நடிகர் ரஜினி தன்னுடைய மகனையும் பேரனையும் பார்த்து பூரிப்பு அடைவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பமாக ரஜினி நன்றாக வாழ்ந்து வருவது போல் அந்தப் பாடல் காட்சி இடம் பெற்று இருக்கிறது..

- Advertisement -

இந்த நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் விக்ரம் படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் வேண்டாம் என லோகேஷ் கனகராஜ் டெலிட் செய்ததை சுட்டு நெல்சன் எடுத்திருக்கிறார் என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

விக்ரம் படத்தில் தந்தையும் மகனும் பேசிக்கொள்வது போல் எந்த காட்சியும் இடம்பெறாது. ஆனால் மகன் இல்லை என்ற விரக்தியில் கமலஹாசன் இருப்பார்.கிட்டத்தட்ட அதே போன்று ஒரு கதையை தான் ஜெயிலரிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நடிகர் ரஜினிக்கு குடும்ப ரசிகர்கள் எப்போதுமே உண்டு. அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக தான் மகன் பேரன் என்று காட்சிகளை நெல்சன் எடுத்திருக்கிறார். இது நிச்சயம் தமிழக ரசிகர்கள் மத்தியில் எடுபடும் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular