Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் துணை தேவையில்லை.. தன் படத்தில் நடிக்க வேறு மொழி நடிகரை ஒப்பந்தம் செய்த ஜேசன்...

விஜய் துணை தேவையில்லை.. தன் படத்தில் நடிக்க வேறு மொழி நடிகரை ஒப்பந்தம் செய்த ஜேசன் சஞ்சய்.. யுவன் ஷங்கர் ராஜா இசை.. !

தளபதி விஜய் நடப்பு தமிழ் சினிமாவில் பெரிய உச்சத்தில் உள்ளார். பொதுவாக பிரபலங்கள் அவர்களது துறையில் இருக்கும் போதே அவர்களது வாரிசுகளை அறிமுகம் செய்துவிடுவார். ஆனால் தளபதி விஜய்யோ அடுத்தகட்டமாக அரசியலுக்குள் நுழைந்துள்ளார். அவரது மகன் ஜேசன் சஞ்சய் தனியாக தமிழ் சினிமாவிற்குள் வந்துள்ளார்.

- Advertisement -

ஜேசன் சாஜய் தன் தந்தை விஜய்யை போல் நடிகராக இல்லாமல் தன் தாத்தா சந்திரசேகர் போல இயக்குனராக முன்வந்துள்ளார். இதற்காக வெளிநாட்டில் படுத்து அங்கு சில குறும்படங்களையும் எழுதி இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் முதல் படத்தை இயக்கத் தயாராகியுள்ளார்.

கடந்த ஆண்டு லைலா நிறுவனம் தயாரிப்பில் தன் முதல் படத்தை ஒப்பந்தம் செய்தார். இதற்கான முதற்கட்ட பணிகளை அவர் தற்போது செய்து வருகிறார். படத்தில் நாயகன் மற்றும் இதர நடிகர்களுக்கான தேடலில் உள்ளனர். இது பற்றி சமூக வலைத்தளத்தில் பல்வேறு செய்திகள் வந்தன.

- Advertisement -

முதலில் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன, ஆனால் கவினோ அடுத்தடுத்து 5 படங்கள் ஒப்பந்தம் செய்துவிட்டார். அதனால் விஜய் சேதுபதியை அணுகியதாகவும் கூறினர். ஆனால் அதுவும் சரியாக வராததால், தற்போது மம்மூட்டி மகன் மற்றும் சிறப்பான நடிப்புத் திறன் கொண்ட துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளதாக உறுதியாகியுள்ளது.

- Advertisement -

துல்கர் சல்மான் இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் படமான ‘ தக் லைப் ’ படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இதற்கு அடுத்து ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பார். ஜேசன் சஞ்சய் படத்திற்கு இசையமைக்க தனக்கு மிகவும் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவை தேர்வு செய்துள்ளார். அவரும் இதற்கு ஒப்புக்கொண்டு உள்ளதாக சொல்கின்றனர்.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும். இதுவரை ஜேசன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ‘ நான் அடிச்சா தாங்க மாட்ட ’ எனும் பாடலில் மட்டுமே நடித்தார். பிறகு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவரை நடிகராக அறிமுகப்படுத்த அழைத்த போதும் வேண்டாம் எனக் கூறி தற்போது இயக்குனராக உருவெடுதுள்ளார்.

Most Popular