Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லீ அடிச்ச சிக்சர்! 3 நாளில் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் சுனாமி

அட்லீ அடிச்ச சிக்சர்! 3 நாளில் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் சுனாமி

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ள அட்லீ, தற்போது பாலிவுட்டின் கிங் காங் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

ஒரு புறம் அட்லீயை பிடிக்காத பலர் அவரை தொடர்ந்து கிண்டல் செய்து வந்தாலும், மறுபுறம் படம் பட்டையை கிளப்புகிறது. இந்த நிலையில் அட்லீ, இயக்கிய அனைத்து படமும் பிளாக்பஸ்டர் அந்தஸ்தை பெற்று இருக்கிறது.

ஹிந்தியில் கடந்த மூன்று நாட்களும் திரையரங்குகள் திருவிழா கோலம் பூண்டுள்ளது. இந்த திரைப்படம் முதல் மூன்று நாட்களில் 380 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றும் அதிக வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் நான்கு நாட்களிலே 500 கோடி ஜவான் கடந்து விடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மைல் கல்லை ஜவான் விரைவில் எட்டி விடும் என்றும் தெரிகிறது. இந்திய சினிமா வரலாற்றில் அதிவிரைவாக ஆயிரம் கோடி ரூபாயை தொட்ட திரைப்படம் என்ற பெருமையை ஜவான் பெரும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -

இந்த மைல் கல்லை எட்டப் போகும் முதல் தமிழ் இயக்குனர் அட்லீ தான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மாநிலங்களிலும் படம் பட்டையை கிளப்புகிறது.

ஜவான் எதிர்பார்க்காதபடி தமிழகத்தில் சிறப்பாக ஓடுவதால் அடுத்த வாரம் வெளியாக இருந்த சந்திரமுகி 2 தற்போது தள்ளி போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் மட்டும் தான் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதனால் ஜவான் தமிழகத்தில் பெரிய வசூலை நிகழ்த்தும் என்று தெரிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவில் சேர்த்து 50 கோடி ரூபாயை ஜமான் எட்டினால் மட்டுமே படத்தை வாங்கிய லட்சுமி மூவி மேக்கர்ஸ்க்கு லாபம் கொடுக்கும். முதலில் இது முடியாத காரியம் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அட்லி செஞ்சுட்டா போச்சு என்று தனது படத்தை இறக்கி விட்டார்.

Most Popular