Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஒரு டிக்கெட்டில் 20 படம் காட்டிய அட்லீ..எந்த எந்த படத்தின் காப்பி ஜவான் தெரியுமா?

ஒரு டிக்கெட்டில் 20 படம் காட்டிய அட்லீ..எந்த எந்த படத்தின் காப்பி ஜவான் தெரியுமா?

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த ஒருவராக திகழ்ந்து தொடர்ந்து வெற்றி படங்களே கொடுத்து வருகிறார். அட்லி என்றால் திரைப்படத்தை காப்பி அடிப்பார் என்று ரசிகர்கள் கூறிவரும் நிலையில் ஜவான் படத்திலும் தன்னுடைய படங்களில் இருந்து சீன்களை சுட்டு அவர் வைத்திருக்கிறார் என்ற புகார் எழுந்துள்ளது.

- Advertisement -

ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் அட்லி தொடர்ந்து காப்பியடிப்பதாக விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்களை போட்டு இருக்கிறார்கள்.

ஜவான் படத்தின் தொடக்க காட்சியை அப்போகளிப்டோ என்ற படத்தில் வரும் காட்சியை அப்படியே சுட்டு அப்படி வைத்திருக்கிறார். இதைப் போன்று படத்தின் இன்டெர்வல் காட்சியை அவருடைய மெர்சல் படத்திலிருந்து எடுத்து அட்லி வைத்திருக்கிறார்.

- Advertisement -

தம்பி விஜயை அண்ணன் விஜய் காப்பாற்றுவது போல் மகன் ஷாருக்கான் காப்பாற்றுவது போல் காட்சி அமைத்திருக்கிறார். இதை போன்று ஜவான் படத்தில் மையக்கருத்தான ஆயுதங்கள் குளறுபடியாக இருக்கிறது. இதனால் போர் வீரர்கள் உயிரிழந்த விடுகிறார்கள் என்ற காட்சி அஜித் நடித்த ஆரம்பம் திரைப்படத்திலிருந்து சுட்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்று அஜித் ரசிகர்கள் புகார் கூறுகின்றனர்.

- Advertisement -

மேலும் மணி ஹீஸ்ட் வெப் தொடரில் வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஷாருக்கான் இங்கு பெண்களை வைத்து செயல்படுகிறார் என்றும் அஜித் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேபோன்று படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் போலீசாராக வரும் சஞ்சய் தத் ஆரம்பத்தில் இருந்து ஷாருக்கானுடன் இணைந்து இந்த விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

இது அனைத்தும் மங்காத்தா படத்தில் இருந்து சுட்ட காட்சிகள் என்று அஜித் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இப்படி ஒரே டிக்கெட்டில் 20 படத்தை வைத்து இடையில் சங்கர் டயலாக் வைத்து படத்தை அட்லி முடித்து விட்டதாக ரசிகர்கள் கலாய்த்து உள்ளனர்.

Most Popular