Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஅட்லி யாருனு இப்போ தெரியுதா? ஜவான் படைத்த பிரம்மாண்ட சாதனை

அட்லி யாருனு இப்போ தெரியுதா? ஜவான் படைத்த பிரம்மாண்ட சாதனை

நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஆர்யா நடித்த ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.

- Advertisement -

அதைத்தொடர்ந்து அவர் தெறி ,மெர்சல், பிகில் என்று தளபதி விஜய் வைத்து அவர் வரிசையாக மூன்று திரைப்படங்களை இயக்கினார். எல்லா திரைப்படங்களுமே வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. இப்படி தமிழில் திரைப்படங்களை இயக்கிய ஆற்றில் திகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் இயக்குனர் அட்லி .தான் இயக்கும் இந்த முதல் திரைப்படமே நடிகர் ஷாருக்கானுடன் அவருக்கு அமைந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி,சானியா மல்கோத்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இதில் ஷாருக்கான் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த பத்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அது இயக்குனர் அட்லிக்கு அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது.

- Advertisement -

பதான் திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடித்திருக்கும் இந்த ஜவான் திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.

ஜவான் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.

திரைப்படத்தின் உடைய ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஷாருக்கான் பார்ப்பதற்கு ஒரு ஆக்சன் ஹீரோ போன்று தான் தெரிந்தார். அதேபோல் தற்போது வெளியிட்டு இருக்கும் ட்ரைலர் முழுவதும் ஆக்சன் காட்சிகளாக இருக்கிறது.

டிரைலர் வெளியிடப்பட்டு 24 மணி நேரத்திற்கு 112 மில்லியன் வியூஸை பெற்று மாபெரும் சாதனை படைத்திருக்கிறது . இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த ட்ரெய்லருக்கே இவ்வளவு வரவேற்பு இருக்கும் பட்சத்தில் திரைப்படத்தின் உடைய வெற்றி எப்படி இருக்க போகிறது என்று ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Most Popular