Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஇதில் எது உண்மை! மீண்டும் பழைய லுக்கிற்கு வந்த ஜெயம் ரவி! இப்படியே இருங்க சார்

இதில் எது உண்மை! மீண்டும் பழைய லுக்கிற்கு வந்த ஜெயம் ரவி! இப்படியே இருங்க சார்

தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திர நடிகராக அறிமுகமாகி தற்போது வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்து உச்சம் தொட்டவர் நடிகர் ஜெயம் ரவி.

- Advertisement -

ஜெயம் ரவி 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது ஜெயம் ரவி தானாம்.

- Advertisement -

இப்படி ஜெயம் ரவி பல படங்களை நடித்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாகயாக அமைந்துள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி நம் மனதில் எப்போதும் யங்காக இருந்தாலும், அவருக்கும் வயது ஆகிவிட்டது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பங்கேற்றார். அப்போது அவர் தாடி , முடி எல்லாம் நிறைத்து இருந்தது. இதைப் பார்த்ததும் 90ஸ் கிட்ஸ்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஜெயம் ரவிக்கும் வயதாகிவிட்டது என்றால் அப்போது நாமும் வயதாகி விட்டோமோ என்ற ஏக்கத்தில் இருந்தனர்.

அது சைரன் திரைப்படத்திற்காக ஜெயம் ரவி வைத்து இருந்த லுக் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.

இதனால் தன்னுடைய பழைய லுக்கிற்கு ஜெயம் ரவி சென்று விட்டார். நேற்று முன்தினம் சிஎஸ்கே விளையாடிய போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சென்று ஜெயம் ரவி பார்த்தார். அப்போது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி போன்ற படங்களில் ஜெயம் ரவி எப்படி பார்த்தோமோ அதே போன்று காட்சி அளித்தார்.இதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இதே லுக்கில் எப்போதும் இருங்கள் ஜெயம் ரவி  என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Most Popular