Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெயம் ரவியின் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் பிரபல நடிகை… அதுபோக ஹீரோவுக்கு எத்தனை...

ஜெயம் ரவியின் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறாராம் பிரபல நடிகை… அதுபோக ஹீரோவுக்கு எத்தனை வேடங்கள் தெரியுமா… முழு அப்டேட் இதோ

அடுத்தடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால் ரொம்பவே பிஸியாக இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில், அருள்மொழி வர்மனாக நடித்திருந்த ஜெயம் ரவி பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். அரச குடும்ப கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்த அவர், மிடுக்கான தோற்றத்திலும், எதார்த்தமான நடிப்பிலும் தூள் கிளப்பினார். படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என்ன மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும் ஜெயம் ரவியின் நடிப்பு தனியாக தெரிந்ததாக பலரும் வாழ்த்தினர்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு பின்னர், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் என்னும் திரைப்படம், வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. இந்த நிலையில், வரும் 28ஆம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் வெளியாகிறது. இதில் நாயகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். என்றென்றும் புன்னகை, மனிதன் திரைப்படங்களை இயக்கிய அகமது, இறைவன் படத்தை எடுத்துள்ளார். சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர், சமீபத்தில் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியது.

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் இயக்குனர் ராஜேஸ் உடன் ஜெயம் ரவி பணியாற்றி வருகிறார். அக்கா தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், நாயகனுக்கு சகோதரியாக பூமிகா நடித்து வருகிறார். படத்தில் நாயகி ஆக பிரியங்கா மோகன் இடம் பெற்றுள்ளாராம். மேலும், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஜீனி படத்திலும் ஜெயம் ரவி கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை மிஷ்கினின் உதவி இயக்குனர் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்களாம். இதற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா ஸ்டாலின் இயக்கும் படத்திலும் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். இது போக கமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படத்தில், ஜெயம் ரவி இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதனிடையே இறைவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், இரண்டு கதாபாத்திரங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளாராம். இதில் இளமை தோற்றத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஆம்புலன்ஸ் டிரைவர் ஆக வருகிறாராம். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனுபமா நடித்திருக்கிறார். வயதான தோற்றத்தில் வரும் ஜெயம் ரவி, சிறை கைதியாக வருகிறார். நாயகியான கீர்த்தி சுரேஷிற்கு போலீஸ் அதிகாரி வேடமாம். இத்தனை தகவல்களால் ஆச்சரியம் அடைந்துள்ள ரசிகர்கள், படத்தின் ரிலீஸிற்காக காத்திருக்கின்றனர்

Most Popular