Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் தள்ளிப் போகும் ஜெயம் ரவியின் இறைவன் ரிலீஸ் தேதி… தனி ஒருவன் ஜோடி மீண்டும்...

மீண்டும் தள்ளிப் போகும் ஜெயம் ரவியின் இறைவன் ரிலீஸ் தேதி… தனி ஒருவன் ஜோடி மீண்டும் இணைந்து இருப்பதால், திரைப்படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் உயிரோட்டம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து அதை வெற்றியாக மாற்றும் கெட்டிக்கார நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ஆரம்பத்தில் தனது சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வந்த அவர், பிறகு மற்ற இயக்குனருடன் பணிபுரிய ஆரம்பித்தார். ஜெயம் திரைப்படத்தில் தொடங்கி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் என ஜெயம் ரவியின் வெற்றிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

- Advertisement -

தீபாவளி, தாம் தூம், தில்லாலங்கடி உள்ளிட்ட திரைப்படங்களும் ஜெயம் ரவிக்கு வெற்றி படங்களாக அமைந்தன. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், ரசிகர்களை பெரிதளவு கவர்ந்தார்.

ஒரு மன்னனுக்கே உண்டான மிடுக்கான தோரணையும், சாந்தமான குணத்தையும் அந்த படத்தில் அவர் காட்டி இருந்ததாக பலரும் கருத்து கூறி வந்தனர். பொன்னியின் செல்வனில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தாலும், அதில் தனது நடிப்பின் மூலம் தனியாக தெரிந்தார் ஜெயம் ரவி.

- Advertisement -

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர், பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் இளம் இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

- Advertisement -

ஷூட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படம் இந்த ஆண்டுக்குள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குனர் எம் ராஜேஸ் உடனும், ஜெயம் ரவி பணியாற்றி வருகிறார். இதன் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதனிடையே அறிமுக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி என்றும் படத்திலும் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடைய தனி ஒருவனுக்கு பிறகு ஜெயம் ரவி நயன்தாரா இருவரும் மீண்டும் இணைந்து இறைவன் படத்தில் நடித்துள்ளனர்.

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை எடுத்த அகமது இந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வரும் 25ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் இருந்து பாடல், டீசர் வெளியாகாமல் இருப்பதால், இதன் ரிலீஸ் தேதியை அடுத்த மாதம் தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Most Popular