Friday, March 29, 2024
- Advertisement -
HomeUncategorizedவெற்றி மாறனை முந்திய ஹெச்.வினோத்.. கமல் படத்தை விரைவில் தொடங்குகிறார்

வெற்றி மாறனை முந்திய ஹெச்.வினோத்.. கமல் படத்தை விரைவில் தொடங்குகிறார்

- Advertisement -

இயக்குனர் ஹச் வினோத் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் உடன் தன்னுடைய அடுத்த படத்தை எடுக்க இருக்கிறார். கமலஹாசன் தற்பொழுது இந்தியன் டு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தீவிரமான படப்பிடிப்பில் இருக்கிறது.மேலும் இந்தத் திரைப்படம் அடுத்த வருடத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கமலஹாசன் இந்தியன் டு திரைப்படம் நிறைவடைந்த பிறகு தன்னுடைய 233 வது படத்தை நடிக்க இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை பட குழுவினர்கள் செய்து வருகிறார்கள்என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தின் உடைய படப்பிடிப்பு இந்த ஆண்டின் நடுவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர்  வினோத் ஆரம்ப காலத்தில் எடுத்த சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

- Advertisement -

ஆனால் இறுதியில் இவர் எடுத்த  வலிமை ,துணிவு ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தன்னுடைய அடுத்த படத்தை உலகநாயகனுடன் எடுக்க இருக்கும் எச் வினோத்திற்கு இந்த திரைப்படத்தில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. விட்ட இடத்தை பிடிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இயக்குனர் ஹச்  வினோத்திற்கு இருக்கும்.

பொதுவாகவே கமலஹாசன் நடிக்கும் திரைப்படங்களின் மீது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும் எச் வினோத்திற்கு இருக்கிறது. இதை அவர் எப்படி கையாள போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Most Popular