Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமா1000 கோடி பட்ஜெட்டில் கமல் - ராஜமவுலி திரைப்படம்.. ! படப்பிடிப்பு எப்போது தெரியுமா.. ?

1000 கோடி பட்ஜெட்டில் கமல் – ராஜமவுலி திரைப்படம்.. ! படப்பிடிப்பு எப்போது தெரியுமா.. ?

இந்திய சினிமாவின் ஜீனியஸ் கலைஞனான கமல்ஹாசனும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலியும் இணைந்து மிகப் பெரிய படத்தை உருவாக்கவுள்ளனர்.

- Advertisement -

தெலுங்கு திரைப்பட இயக்குநரான ராஜமவுலி இதுவரை உருவாக்கிய அனைத்துப் படங்களும் ஹிட். மேலும் பிரம்மாண்டமான படங்களை இயக்குவதில் வல்லவர். சுருக்கமாக சொல்லப்போனால் டோலிவுட்டின் ஷங்கர். இவரது படங்களுக்கு மினிமம் கியாரண்டி. இந்த ஆண்டு கூட பாடல்கள் பிரிவில் மிகவும் உயரிய விருதான ஆஸ்காரைத் தட்டிச் சென்றது.

நடிகர் கலம்ஹாசன் கடந்த ஆண்டு தன் ரசிகன் மற்றும் இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து அமர்களப்படுத்தியது. உடனே தன் அடுத்தப் படங்கையும் கமல் தொடர விரும்பி நடித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின் பாதியில் விட்டுப்போன ஷங்கரின் இந்தியன் 2 படத்தை தொடர்ந்தார். மேலும் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் கல்கி படத்தில் நடிக்கிறார். அதனுடன் எச்.வினோத்துடன் ஒரு படமும் மணிரத்னம் அவர்களுடன் ஒரு படமும் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த மூன்று படங்களுக்குப் பின்னரே ராஜமவுலியின் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல்ஹாசன்.

- Advertisement -

இயக்குனர் ராஜமௌலியும் தன் அடுத்தப் படத்தில் பிஸியாக இருக்கிறார். மகேஷ் பாபுவின் 29வது படத்தை இவர் இயக்குகிறார். இதன் முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். இது முடிந்த பிறகு கமலை வைத்து மிகப் பிரம்மாண்டமான படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

கமல்ஹாசன் – ராஜமவுலி கூட்டணியில் உருவாகவிருக்கும் படத்தின் பட்ஜெட் 1000 கோடி என்கிறார்கள். அறிவிப்புக்கு மும் இது போன்றவை கிளம்புவது சாதரமானவையே. இதுவரை இந்த ஜோடி மட்டுமே சேர்வதாக செய்திகள் மட்டுமே கிடைத்துள்ளது. எப்படியும் இது நடக்க குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும்.

Most Popular