Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாலியோ படத்தின் டீசரில் கமல் ஹாசன்.. ! எல்.சி.யூ குறித்து தயாரிப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை.. !

லியோ படத்தின் டீசரில் கமல் ஹாசன்.. ! எல்.சி.யூ குறித்து தயாரிப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை.. !

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நட்சத்திர படையுடன் தயாராகி வரும் திரைப்படம் லியோ. ஜனவரி மாதம் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் பூஜையுடன் முதல் அட்டவணையை கேஷ்மிரில் துவங்கி ஒரே மாதத்தில் அதை நிறைவு செய்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட பணிகளை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இன்னும் சரியாக 30 நாட்களுக்குள் ஒட்டுமொத்த ஷூட்டிங் வேலைகளையும் நிறைவு செய்து போஸ்ட் புரொடக்ஷனில் அடியெடுத்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு இடையே அவ்வப்போது அப்டேட்களையும் வழங்குகின்றனர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் படமாக உருவாகிக் கொண்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாள் மாதமான ஜூனில் அடுத்தடுத்து இரண்டு அப்டேட்கள் வரவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒன்று. மற்றொன்று லியோ தரப்பிடம் இருந்து.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் & கோ தலைமையில் லியோ படம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் நிறைந்த படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படத்திற்கு எப்படி முதலில் புரோமோ அடுத்து க்ளிம்ஸ் வீடியோ வெளியானதோ அதே பாணியில் லியோ படத்திற்கும் செய்கிறார் இயக்குனர் லோகேஷ்.

- Advertisement -

தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு ஆக்க்ஷன் காட்சிகள் கொண்ட ஓர் க்ளிம்ஸ் வெளியாகவுள்ளது. அதற்கான பணிகளையும் படக்குழு ஏற்கனவே துவங்கிவிட்டதாம். இந்த வீடியோவில் இன்னும் பெரிய சிறப்பு என்னவென்றால் கமல் ஹாசனின் வாய்ஸ் ஓவரில் தான் வீடியோ உருவாகியுள்ளது.

அதனால் லியோ படம் எல்.சி.யூவில் இடம்பெறுமா என்ற ஆசை உடனே அனைவருக்கும் வரலாம். அதற்கும் படக்குழு தயாரிப்பாளர்கள் சந்திப்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் விக்ரம், கைதி யூனிவர்சில் விஜய்யை இணைப்பதைக் குறித்து தான் அந்த சந்திப்பில் பேசியுள்ளனர். விஜய்யின் இணைப்பு வியாபாரத்தை பல மடங்கு கூட்டும் என எண்ணுகின்றனர். அதனால் லியோ படம் எல்.சி.யூவில் சேர தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளன.

Most Popular