Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாபொன்னியின் செல்வன் 2 - தமிழர்களின் பெருமை- கமல் பாராட்டு.. 4 நாள் வசூல் எவ்வளவு

பொன்னியின் செல்வன் 2 – தமிழர்களின் பெருமை- கமல் பாராட்டு.. 4 நாள் வசூல் எவ்வளவு

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் நேரில் கண்டு களித்தார். சென்னையில் நடைபெற்ற காட்சி ஒன்றில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கமல்ஹாசன், மணிரத்தினம் ஆகியோர் இணைந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை கண்டு களித்தனர்.

- Advertisement -

படம் முடிவடைந்த பிறகு செய்தியாளரிடம் பேசிய கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழகத்தின் பெருமை என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு தமிழக மக்கள் கொடுக்கும் வரவேற்பு தமக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், இதற்காக இயக்குனர் மணிரத்தினத்தை தாம் பாராட்டுவதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது போன்ற தைரியமான முடிவை எடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்வதாக கமலஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நான்கு நாள் முடிவில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்துள்ளது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் முதல் பாகமே லைக்கா நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்த நிலையில் தற்போது இது அனைத்தும் லாப கணக்குகளை சேரும். மேலும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது முதல் பாகத்தை காட்டிலும் குறைவு தான் என கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2  ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை விட மிக குறைவாக தான் வசூல் செய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Most Popular