செய்திகள்

கமல்ஹாசனுடன் கைக்கோர்க்கும் அஜித் இயக்குனர்.. செம மாஸான தகவல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கையை பெற்ற இயக்குனராக வலம் வருபவர் எச் வினோத்.அஜித், வினோத் தனது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். இதேபோல் வினோத் எடுத்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் காவல் அதிகாரியின் புலன் விசாரணை எப்படி இருக்கும் என்பதை வித்தியாசமாக காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு போன்ற திரைப்படத்தில் நடித்த கமலும், தீரன் அதிகாரம் ஒன்று இயக்கிய ஹெச்.வினோத்தும் ஒன்று சேர்ந்தால் படம் எப்படி இருக்கும்.

அதுதான் இப்போது நடக்கப் போகிறது, விக்ரம் திரைப்படம் வெற்றிக்கு பிறகு கமல் பம்பரம் போல் சுழன்று அடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு கமல் பா.ரஞ்சித்துடன் இணைந்து படம் ஒன்றில் நடிக்கிறார். அதன் பிறகு மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் இணைந்து படத்தில் பணியாற்றுகிறார். இதன் பிறகு இயக்குனர் வெற்றிமாறனுடன் கமல்ஹாசன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியானது .இந்த நிலையில் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்காக நடிகர் கமலுடன் இணைந்து எச் வினோத் படம் இயக்கு உள்ளதாக திரைப்பட வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது எச் வினோத் அஜித்தை வைத்து படம் எடுத்து வருகிறார். அந்த படம் முடிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதியுடன் எச் வினோத் பணியாற்றுகிறார்.அந்த படத்தை முடித்த பிறகு கமல் படத்திற்காக எச். வினோத் கதையை தயார் செய்கிறார். கமல் தனது படங்களை முடித்து வருவதற்கும் எச் வினோத் அஜித் விஜய் சேதுபதி படங்களை முடித்து வருவதற்கும் நேரம் சரியாக ஒத்துவரும் இதனால் இவ்விருவரும் இணைந்து பணியாற்றுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top