Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்ஹாசன்.. சிம்புவும் வரவில்லை.. புதிய தொகுப்பாளர் வருகை.. !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்ஹாசன்.. சிம்புவும் வரவில்லை.. புதிய தொகுப்பாளர் வருகை.. !

ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன தொலைகாட்சி விஜய் டிவி. அதில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது வெற்றிகரமாக 7வது சீசன் போய்க் கொண்டிருக்கிறது.

- Advertisement -

கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளாக படங்களில் பெரிதாக நடிக்கால் பிக் பாஸ் மற்றும் அரசியல் களத்தில் மட்டுமே மாறி மாறி கவனம் செலுத்தினார். அண்மையில் கிடைத்த செய்தியின் படி இந்த சீசனுடன் கமல்ஹாசன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக சொல்கிறார்கள். இதுவே அவருக்கு கடைசி சீசன் எனத் தெரிகிறது.

இவருக்கு பதிலாக யார் இத்தகு பெரிய பொறுப்பை ஏற்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் இல்லாத வேளையில் ஜூனியர் சூப்பர்ஸ்டார் சிம்பு அந்தப் பொறுப்பை சிறப்பாக செய்தார். அதனால் மீண்டும் அவரே வருவாரா என்ற சந்தேகங்கள் மக்களிடையே வந்துள்ளது.

- Advertisement -

சிம்பு அவர்கள் தற்காலிகமாக மட்டுமே பொறுப்பேற்று அதைச் செய்தார். முழு நேரம் சினிமாவில் கவனம் செளுத்தவுள்ளதால் அவர் மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை. அதனால் அனுபவம் வாய்ந்த தமிழ் சினிமா நடிகர் சாத்குமார் அவர்கள் அடுத்த தொகுப்பாளராக அமைவார் எனக் கூறப்படுகிறது.

- Advertisement -

அவர் அந்த இடத்துக்கு சரியான நபராக நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனைப் போலவே நல்ல அனுபவம் கொண்ட இவர் இதைச் சிறப்பாக எடுத்து நடத்தும் திறன் கொண்டவரே. அண்மையில் இந்த சீசனில் கமல்ஹாசன் பேசிய சில கருத்துகள் மக்கள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் இணையத்தில் கமல்ஹாசனை மீம் கிரியேட்டர்ஸ் பயங்கரமாக ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அவர் இதனால் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து பெரிய படங்கள் ஒப்பந்தம் செய்திருப்பதால் அவர் இதில் இருந்து விலகுகிறார் எனத் தெரிகிறது.

Most Popular