Sunday, May 19, 2024
- Advertisement -
HomeEntertainmentஅப்போ ரஜினி… இப்போ கமல்ஹாசன்… தனுஷுடன் நெல்சன் சேரும் படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

அப்போ ரஜினி… இப்போ கமல்ஹாசன்… தனுஷுடன் நெல்சன் சேரும் படத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், தமன்னா, வஸந்த் ரவி, ரோபோ சங்கர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து பின்னணி பணிகளை முடித்து இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. தமிழில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சனின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுந்தது. அவர் பாலிவுட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவர் தற்போது தனுஷுடன் இணைய இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த படம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

தற்போது புதிய தகவலாக இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்திற்கு பிறகு இளம் நடிகர்களை வைத்து தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். அந்த வகையில் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வரும் கமல்ஹாசன், அடுத்தபடியாக ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் படத்தையும் தயாரிக்கப் போகிறார். இந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கிறார்.

- Advertisement -

தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்த வருகிறார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் அவர் அடிக்கிறார். பின்னர் வட சென்னை பாகம் 2, தனுஷ் 50 படவேளைகளில் பிசியாக அவர் இருக்கும் நிலையில், நெல்சன் உடன் இணைவதாக வெளியாகி இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular