Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் அப்டேட்டை அறிவித்துள்ள கங்குவா படக்குழு.. !

சூர்யா பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் அப்டேட்டை அறிவித்துள்ள கங்குவா படக்குழு.. !

கோலிவுட்டில் அடுத்து வெளியாகவிருக்கும் பெரிய படங்களில் ஒன்று சூர்யாவின் கங்குவா. இயக்குனர் சிவா & கோ தலைமையில் இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் எந்தவித பெரிய அப்டேட்டும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது. வருகின்ற பொங்கலுக்கு வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

- Advertisement -

சூர்யா – சிவா கூட்டணியில் கங்குவா

முதல் முறை இணையும் நடிகர் சூர்யா – இயக்குனர் சிவா மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான வரலாற்று திரைப்படத்தை உருவாக்குகின்றனர். 1850களில் நடக்கும் கற்பனைக் கதையை சிவா எழுதியுள்ளாராம். எப்போதும் சென்டிமென்ட் கமர்ஷியல் படங்களை செய்யும் சிவா முதல் முறை தன் வழக்கத்தில் இருந்து வெளியே வந்து இயக்குகிறார்.

கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒரு வருடத்தில் அப்டேட் என 2/3 முறை தான் படத்தைப் பெற்று படக்குழு பகிர்ந்துள்ளனர். ஏப்ரல் மாதம் தான் மோஷன் போஸ்ட்டர் மற்றும் தலைப்பே வெளியானது.

- Advertisement -

கங்குவா ஸ்பெஷல் வீடியோ

வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சூர்யா தன் 48வது பிறந்தநாளை கடக்கிறார். அதனை கொண்டாடும் வகையில் கங்குவா படக்குழு ஓர் ஸ்பெஷல் புரோமோ வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்.

- Advertisement -

ஏற்கனவே வெளியான போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரில் சூர்யா ஓர் போர் வீரன் போல் காட்சி அளித்தார். ஆனால் பெரிதளவில் அவரின் கதாபாத்திரத்தை காட்டவில்லை. இம்முறை வெளியாகும் வீடியோ காட்சியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10 மொழிகளில் 3டியில் தயாராகிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் சூர்யாவின் கேரியரில் பெரிய படமாக முன்னேறியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் கங்குவா படம் முன் வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular