Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாமற்ற மொழிகள் அவ்வளவு கேவலமா.. ஜாதி ஒடுக்குமுறைக்கு குரல் கொடுத்துவிட்டு அதைப் போற்றும் கந்தாரரா இயக்குனர்...

மற்ற மொழிகள் அவ்வளவு கேவலமா.. ஜாதி ஒடுக்குமுறைக்கு குரல் கொடுத்துவிட்டு அதைப் போற்றும் கந்தாரரா இயக்குனர் ரிஷப் ஷெட்டி.. !

கடந்த ஆண்டு கன்னட மொழியில் வந்த மிகப் பெரிய ஹிட் கந்தாரரா திரைப்படம். இப்படம் பிற மொழிகளிலும் அமோகமாக ஓடி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தெய்வீகத் தன்மையை அடிப்படையாக வைத்து வரும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வரும் என படக்குழு அறிவித்திருந்தது.

- Advertisement -

சில தினங்களுக்கு முன்னர் கந்தாரரா அத்யாயம் 1 டீஸர் வெளியானது. முதல் பாகத்தில் ஏற்படுத்திய அதே தாக்கம் இதிலும் உணரப்பட்டது. முதல் பாகத்திற்கு முன்னர் நடக்கும் காட்சிகள் படகமாக்கபடவுள்ளது. அதாவது அத்யாயம் 1 கந்தாரரா படத்திற்கு ப்ரீக்குவல்.

கந்தாரரா படம் வெளியான போது என்னதான் ஒரு பக்கம் நா வரவேற்பு கிடைத்தாலும் சிலர் இப்படத்தை மிகவும் சுமாராக இருப்பதாகவே விமர்சனம் செய்தனர். படத்தில் அனைவரும் ஒன்று ஜாதி தேவையில்லை என பாடம் எடுத்த இயக்குனர் ஏன் அவரது பெயரில் மட்டும் இன்னும் ஷெட்டி என ஜாதிப் பெயரை இணைத்துக் கொண்டுள்ளார் என கேள்விகள் எழுப்பப்பட்டன.

- Advertisement -

அண்மையில் மீண்டும் இயக்குனர் ரிஷப் ஷெட்டி இணைய வாசிகளுக்கு கன்டென்ட் கொடுத்துள்ளார். மீண்டும் அவரை வைத்து செய்து வருகின்றனர். அதாவது ரிஷப் ஷெட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு எத்தனை கோடிகள் பணம் கொடுத்தாலும் பிற மொழிப் படங்களை இயக்க மாட்டாரா எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் இதற்கு முன் ஓர் நேர்காணல் நிகழ்ச்சியில் ரக்சித் ஷெட்டி இயக்குனர் ரிஷப் ஷெட்டி பிற மொழிப் படங்களை இயக்க ஆசைப்படுகிறார் என தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அதற்க்கு மாறாக அவர் சொல்வது ஏதோ கவனம் ஏற்கச் செய்யும் வித்தை என நெட்டிசன்கள் அவரைத் தாக்கி வருகின்றனர்.

கன்னட மொழியில் தயாராகும் படம் நல்ல லாபம் பெற வேண்டி மற்ற மொழிகளில் டப்பிங் செய்வது என்ன கணக்கில் வரும் ? பிற மொழிப் படங்களை இயக்க விருப்பமில்லை என கூறுவதற்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் செய்ய மாட்டேன் என கூறுவதற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற மொழிகளை கீழ்தரமானக அவர் தெரிவிப்பதை அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றனர்.

Most Popular