Friday, April 19, 2024
- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லயா.. காண்டாராவை காப்பியடித்த விஜய் டிவி

இதுக்கு எல்லாம் ஒரு முடிவே இல்லயா.. காண்டாராவை காப்பியடித்த விஜய் டிவி

- Advertisement -

ஆரம்பக் காலத்தில் வெள்ளி திரைகளில் வரும் பாடல்களை சின்னத்திரையில் போட்டு காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இது காப்பிரைட்ஸ் பிரச்சனையை உருவாக்கும் என பலரும் எச்சரித்த நிலையில் அதனை எந்த ஒரு சின்னத்திரை இயக்குனர்களும் கண்டு கொண்டதில்லை இது குறித்து தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இமான் வலியுறுத்தி இருந்தார் தற்போது இது எல்லை மீறி  வெள்ளித் திரையில் வரும் சண்டைக் காட்சிகளை எல்லாம் காப்பி அடித்து சின்னத்திரை ஹீரோக்களை வைத்து எடுத்து வருகிறார்கள்.

பெரிய பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் சின்னத்திரை நடிகர்கள் நடிக்கும் பொழுது பார்க்க காமெடியாக இருக்கிறது. சின்னத்திரை பொருத்தவரை காதல் காட்சிகளுக்கு இருக்கும் வரவேற்பு, சண்டைக் காட்சிகளுக்கு இருப்பதில்லை. அதுவும் திரைப்படங்களில் பார்த்த சண்டைக் காட்சியை சின்னத்திரை நடிகர்கள் நடிக்கும் பொழுது அவர்களுடைய ரியாக்ஷன்களை எல்லாம் சிரிக்கும் விதமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வகையில் தற்பொழுது சினிமா உலகில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காந்தாரா திரைப்படத்தின் உடைய இறுதிக் காட்சியில் வரும் சண்டையே விஜய் டிவி ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 என்ற தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சின்னத்திரை நடிகர் சித்து காப்பி அடித்து நடித்திருந்தார்.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவி  சந்தியா காவல்துறை அதிகாரி ஆவதற்கான பயிற்சியில் இருக்கும் போது ஒரு தீவிரவாதியால் கடத்தப்பட்டார். போலும் அவரிடம் இருந்து தன் மனைவியையும் பிற அதிகாரிகளையும் காப்பதற்காக அந்த தீவிரவாதியிடம் சரவணன் காந்தாரா திரைப்படத்தின் இறுதியில் சாமி வந்தது போல் ரிஷப் செட்டி எப்படி சண்டையிடுவாரோ அது போல் சண்டையிடுவதற்கு முயற்சி செய்திருப்பார்.

ஆனால் அதை அவர்கள் காப்பியடித்தது தெளிவாக தெரிவதோடு அல்லாமல் பார்ப்பதற்கு சிரிப்பை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கும். இவ்வாறான காட்சிகளால் தொடர்களின் மீது இருக்கும் ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து விடுகிறது. தொடர்கள் என்றால் அதில் எதார்த்தம் நிறைந்து இருக்க வேண்டும்.

அப்படி பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும். அதில் வராத ஆக்சன் களை  ஹீரோக்களின் மீது திணித்து படமாக்கப்படுவது நன்றாக இல்லை. இது கேலி செய்வதற்கும் மீம்ஸ்கள் கிரேட் செய்வதற்கும் இவ்வாறான காட்சிகள் ரசிகர்களுக்கு பயன்படுகிறது. விஜய் டிவி தொடர்களை பொறுத்தவரை நடிகர் சித்துவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அவருக்கும் இவ்வாறான காட்சிகள் பொருந்தவில்லை என்பது தான் உண்மை.

Most Popular