Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாகீர்த்தி சுரேஷ் தொடர்பான வதந்தி- மன உளைச்சலை தருவதாக தந்தை கருத்து

கீர்த்தி சுரேஷ் தொடர்பான வதந்தி- மன உளைச்சலை தருவதாக தந்தை கருத்து

தமிழ் சினிமா நடிகைகளின் முதன்மையான இடத்தில் இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் .அழகாக இருந்தால் யார் வேண்டுமானாலும் கதாநாயகி ஆகிவிடலாம் என்ற இந்த காலகட்டத்தில் அழகோடு சேர்ந்த தனித்துவமான திறமை கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

- Advertisement -

இவர் ரஜினிமுருகன், ரெமோ போன்ற காதலை கதைக்களமாகக் கொண்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .இதன் மூலம் இவர் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார் ரசிக்கும் வண்ணம் இவருடைய நடிப்பும் இருக்கிறது என்றுதான் இவருடைய பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை சாவித்ரி வாழ்வை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் மிக அழகாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்.

- Advertisement -

அவரை அப்படியே பார்ப்பதற்கு நடிகை சாவித்திரியை பார்ப்பது போன்று உணர்வு ஒவ்வொருவரிடமும் ஏற்பட்டது .அவருடைய தத்ரூபமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இவர் மீது ஒரு பெரும் மரியாதையை ஏற்பட்டது. அத்த திரைப்படம் வந்த பொழுது இவரை மக்கள் செல்வி என்றெல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள்.

- Advertisement -

இந்தத் திரைப்படம் நடிகை கீர்த்தி சுரேஷின் உடைய சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூட சொல்லலாம்.இதற்குப் பிறகு இவர் நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் .

ஆனால் இதற்குப் பிறகும் இவர் இது போன்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்க்கார், அண்ணாத்த, சாணிக் காகிதம் போன்ற திரைப்படங்களில் எல்லாம் இவர் நடித்தார். ஆனால் அது எதுவும் இந்த அளவிற்கு இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தற்பொழுது கூட தசரா திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த கதைக்களத்தில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வண்ணம் ரசிகர்களிடம் பேசப்பட்டது.

அப்படி சினிமா உலகில் மதிப்பு மிக்க நடிகையாக உலா வரும் கீர்த்தி சுரேஷ் பற்றி தற்பொழுது இணையத்தில் பேசப்படும் செய்திகள் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவருடைய தந்தை தற்பொழுது கூறியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சிறுவயது நண்பரான ஃபர்கான் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் .

கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே இவருடன் கீர்த்தி சுரேஷிற்கு காதல் இருக்கிறது என்று இணையத்தில் பேசப்பட்டு வந்தது. அதை இந்த பிறந்தநாள் வாழ்த்தின் மூலம் உறுதி செய்து விட்டார்கள் ஆனால் இதை எதுவும் கீர்த்தி சுரேஷ் அவருடைய தாய் தந்தையோ இதைப் பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை .இது வீணான வதந்தி இவற்றால் எங்கள் குடும்பமே மன உளைச்சல் இருக்கிறது என்று கீர்த்தி சுரேஷின் தந்தை மிக வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

Most Popular