Monday, May 6, 2024
- Advertisement -
Homeசினிமாவாழ்கை வரலாறு படமாக உருவாகும் கமல்ஹாசன் - வினோத் படம்.. ! இது தான் கதை.....

வாழ்கை வரலாறு படமாக உருவாகும் கமல்ஹாசன் – வினோத் படம்.. ! இது தான் கதை.. !

அஜித்துடன் இரண்டு வெற்றித் திரைப்படங்களை முடித்துவிட்டு கமல்ஹாசனுடன் கைக் கொர்துள்ளார் இயக்குனர் ஹெச்.வினோத். இந்த ஜோடி ஒன்று சேர்ந்து திரைப்படம் செய்யவுள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் பரவின. ஆனால் அதிகாரபூர்வமாக சென்ற வாரம் மோஷன் போஸ்டர் மூலம் அறிவித்தது படக்குழு.

- Advertisement -

கமல்ஹாசனின் 233வது படமாக இது அமைகிறது. ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ்க்கு கீழ் மகேந்திரன், கமல்ஹாசன் தயாரிக்கின்றனர். ‘ ரைஸ் டூ ரூல் ’ என்ற வாக்கியதுடன் மோஷன் போஸ்டர் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

வெளியான போஸ்டரில் கமல்ஹாசன் உரிமைக்காக போராடுவது போல் தெரிந்தது. இதன் மூலம் படம் அரசியல் களத்தைக் கொண்டதாக இருக்கும் என கணிக்கின்றனர். அதோடு பல மாதங்களுக்கு முன்பே இந்த இருவரும் இணைந்து விவசாயம் – அரசியல் வகையில் படம் செய்வதாக பேசிக் கொண்டனர்.

- Advertisement -

வாழ்கை வரலாறு கதை

ஏற்கனவே வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையாகியுள்ளது. நெல் ஜெயராமனின் வாழக்கை வரலாற்றை படமாக உருவாக்கவுள்ளார் வினோத். திருவாரூரைச் சேர்ந்த இந்த நெல் ஜெயராமன் விவசாயத்தில் 170 நெற்பயிர்களை மீட்டு பாதுகாத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு நெல் ஜெயராமன் காலமானார் இவரது முழு வாழ்கையையும் படமாக உருவாக்கி மக்களுக்கு அவரது புகழை எடுத்துரைக்கவுள்ளனர். இதற்காக விவசாய சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதுவரை இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய அனைத்துப் படங்களும் உண்மைச் சம்பவங்களை மையாக கொண்டு உருவாக்கப்பட்டதே. இப்படமும் அதே வகையில் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் விரைவில் அப்பணிகளை நிறைவு செய்துவிட்டு செப்டம்பர் முதல் வினோத்துடன் ஷூட்டிங்க்கு செய்வார்.

Most Popular