Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசெய்திகள்மக்களே! சீக்கிரம் பணம் சம்பாதித்து வருகிறேன்.. நெல்லை மக்களுக்கு பாலா ஆறுதல்

மக்களே! சீக்கிரம் பணம் சம்பாதித்து வருகிறேன்.. நெல்லை மக்களுக்கு பாலா ஆறுதல்

மூன்று நான்கு தலைமுறை உட்கார்ந்த சாப்பிடுவதற்கு சொத்து சேர்த்து வைப்பதில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் மத்தியில் சாதாரண தொகுப்பாளராக இருந்து தான் பெறும் ஒரு சில லட்சங்களை கூட சேர்த்து வைக்காமல் மக்களுக்காக உதவி செய்ய முன்வந்த கே பி ஒய் பாலா தற்போது ரியல் லைஃப் ஹீரோவாக ரசிகர்களுக்கு மாறிவிட்டார்.

- Advertisement -

ஏற்கனவே இவர் யாருமே செய்ய முன்வராத மிகப் பெரும் ஒரு செயலை மிக சாதாரணமாக செய்து முடித்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர். கொஞ்சம் பணம் சேர்ந்த உடனேயே நாம் என்ன கார் வாங்க போகிறோம், எப்படிப்பட்ட வசதி அதில் இருக்கப் போகிறது என்றெல்லாம் சிந்திக்கக் கூடிய மனிதர்கள் மத்தியில் அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு மலைவாழ் கிராமத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை வைத்து ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவி செய்தார் கே பி ஒய் பாலா.

அதேபோல் தான் கே பி ஒய் பாலா, சென்னையில் மிச்சம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏறத்தாழ 5 லட்ச ரூபாய் வரை செலவிட்டு உதவி செய்தார் 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் என்றும் மூன்று லட்ச ரூபாய் மதிப்பிற்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் உதவி செய்து இருக்கிறார் கே பி ஒய் பாலா.

- Advertisement -

இந்த நிலையில் இவரிடம் சென்னைக்கு உதவிய பாலா ஏன் இன்னும் தென் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இவர் நான் சம்பாதித்த மொத்த பணத்தையும் சென்னை மக்களுக்கு செலவழித்து விட்டேன். நிச்சயமாக இன்னும் ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதித்து தென் தமிழகத்திற்கு உதவ வருவேன் என்று நம்பிக்கையான வார்த்தையை தென் தமிழக மக்களுக்கு கூறியிருக்கிறார் கே பி ஒய் பாலா.

- Advertisement -

கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை என்று வீடியோக்களை பதிவிட்டு அரசியல் செய்து வந்த நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் சின்ன அளவில் இருந்தாலும் அதைக் கொண்டு பெரிய அளவில் உதவி செய்து வருகிறார் கே பி ஒய் பாலா.

இப்படி ஓடி ஓடி மக்களுக்காக உதவி செய்யும் பாலாவிற்கு மக்கள் மத்தியில் அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Most Popular