Friday, May 17, 2024
- Advertisement -
Homeசினிமாதொடர்ந்து தொல்லை கொடுக்கும் பெரிய நடிகரின் மகன்.. ! மனம் திறந்து கோபத்தை வெளிக்காட்டிய கிரித்தி...

தொடர்ந்து தொல்லை கொடுக்கும் பெரிய நடிகரின் மகன்.. ! மனம் திறந்து கோபத்தை வெளிக்காட்டிய கிரித்தி ஷெட்டி.. !

இளம் அழகு நடிகை கிரித்தி ஷெட்டி குறைந்த படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். ஹிருத்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் அறிமுகமான கிரித்தி ஷெட்டி பின்னர் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் தன் இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

தெலுங்குவில் உப்பென்னா, ஷ்யாம் சிங்கா ராய், தி வாரியர் போன்ற இன்னும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் அண்மையில் வெளியான வெங்கட் பிரபுவின் கஸ்ட்டடி படத்தில் அறிமுகமானார். அடுத்ததாக மலையாள சினிமாவில் அறிமுகமாக அஜயன்டே ரண்டம் மோஷனம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

கிர்திதி ஷெட்டி குறித்த வதந்தி

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கிரித்தி ஷெட்டியை பெரிய நடிகரின் மகன் தொல்லை கொடுபத்தாக அவர் குறிப்பிட்டார் என்ற ஒரு செய்தி பரவியது. அந்த நடிகரின் மகன் செல்லும் இடங்களுக்கெல்லாம் கிரித்தி ஷெட்டியை வருமாறு வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்குமாறு தன் சமூக வலைதள பக்கத்தில் இதனைப் பற்றி விவரிதிருந்தார் கிரித்தி ஷெட்டி. அவர் கூறியதாவது, “ இப்படியெல்லாம் கதைக் கட்டுவதை நிறுத்துங்கள். நானும் இவ்வித வதந்தியெல்லாம் சாதாரணம் என கண்டுகொள்ளமல் இருந்தேன் ஆனால் தற்போது அளவைக் கடந்து செல்கிறது. ” என தன் கோபத்தைக் காட்டினார்.

- Advertisement -

கிரித்தி ஷெட்டியின் அடுத்த தமிழ் படம்

கஸ்ட்டடி படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி எனத் தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தை அறிமுக மற்றும் மிஷ்கினின் துணை இயக்குனரான அர்ஜூனன் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்தத் திரைப்படத்தை தயாரிக்கும் வேல்ஸ் நிறுவனத்திற்கு இது 25வது படம். பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், வமிக்கா கப்பி மற்றும் கிரித்தி ஷெட்டி வருகின்றனர்.

Most Popular