Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்தேவர்கொண்டா, சமந்தா நடித்த குஷி ஒடிடி ரிலீஸ் எப்போது? எந்த தளம்?

விஜய்தேவர்கொண்டா, சமந்தா நடித்த குஷி ஒடிடி ரிலீஸ் எப்போது? எந்த தளம்?

ஆந்திர சினிமாவில் எந்த ஒரு பெரிய பின்புலமும் இல்லாமல் சினிமாவில் சாதித்த நடிகராக வலம் வருகிறார் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி மூலம் இளசுகளின் மனதை கட்டிப்போட்ட விஜய் தேவர கொண்டா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களையும் அதிக அளவில் ஈர்த்தார்.

- Advertisement -

இந்த நிலையில் விஜய் தேவர் கொண்டா நடித்த லிகர் என்ற திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அந்தப் படம் தோல்வியில் முடிவடைந்ததால் மீண்டும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருந்த விஜய் தேவர் கொண்டா தன்னுடைய வழக்கமான பார்முலாவான காதல் கதையை தேர்ந்தெடுத்தார்.

இந்த படத்தில் நடிகை சமந்தா வுடன் ஜோடி சேர்ந்து விஜய் தேவர் கொண்டா நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. எனினும் படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருந்ததாக விமர்சனம் இழந்தது.

- Advertisement -

இந்த படத்தை இரண்டு மணி நேரத்தில் முடித்து இருக்கலாம் என்றும் ஆனால் தேவையில்லாமல் இயக்குனர் இழுத்து விட்டதாக குற்றச்சாட்டு இழந்துள்ளது.இதனால் இந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் அதன் பிறகு பெரிய அளவில் பணம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

- Advertisement -

இதனை அடுத்து இந்த திரைப்படத்தை ஓடிடியில் விரைவில் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.ஓடிடியில் படத்தை அனைவரும் எடுத்து விட்டாலும் விஜய் தேவரகொண்டாவின் படம் பெற வேண்டி வசூலை இது பெறவில்லையாம்.இதனால் வரும் அக்டோபர் ஆறாம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளது.

மேலும் இந்த படம் ஹிந்தி தெலுங்கு தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் நெட்பிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.இதனால் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்க்க வேண்டுமா என நினைத்த ரசிகர்கள் விரைவில் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

திரையரங்கில் நன்றாக ஓடிய படங்களை ஓடிடியில் மிதிப்பதும் திரையரங்கில் மிதிக்கப்பட்ட படங்கள் ஓடிடியில் வரவேற்கப்படுவதும் புதிய டிசைனாக மாறிவிட்டது. இதில் குஷி மிதிக்கப்படுமா இல்லை வரவேற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Popular